தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..
ஆண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ஆண்கள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

உண்மைகள்


காதலின் சுவை
அறியாதவர்களும்,
ஒருதலையாய்க்
காதலித்துத் தோற்றவர்களும்
காதலை மதிப்பதில்லை!


கவிதைகள் உலகம்..

என் மகளுக்கு ஒரு கவிதை!!


அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன்
உன் பிறப்பால் !!
பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!!

உன் வயது தான் வளர அதனுடன் சேர்ந்து குறையதுடிக்கிறது என் வயது !!!

தாலாட்டு பாட தாய் இருந்தும் உன் செவிகள் என் குரலினை கேட்க ஏங்கினேன்!!!

நீ தூங்கும் தலையணையாய் என் மார்பு மட்டுமே இருக்க துடிக்கிறேன் !!!

நீ பிறந்த நாள் முதல் நீ என் மகள் என்று உரைக்க பொறாமையும் வளர்கிறது என்னுள்ளே

விண்மீன்கள் மின்னும் தொட்டிலில் நீ தவழ விரும்பினேன்!!!!

ஒரு சின்ன உண்மை..

நமக்கு பிடிச்சவங்க மேல ரொம்ப கோவம்
இருந்தாலும் அவங்க கிட்ட பேசாம
நம்மளால இருக்க முடியாது...

அதே நேரம் பேசவும் மனசு வராது
mobile display ல அவங்க name தான் இருக்கும்
call பண்ணலாமா வேண்டாமான்னு 1000
முறை யோசிப்போம் . . .

ஏன் sometimes call பண்ணிட்டு ring
போறதுக்கு முன்னாடி cut
பண்ணிடுவோம்
அந்த time அவங்க நமக்கு call
பண்ணினா செம்ம happy ah feel
பண்ணுவோம்....

but பேசும்
போது என்னவோ கோவமா இருக்குற
மாறி தான் பேசுவோம்
but actual fact என்னன்னா அவங்க call
பண்ணதுமே நம்ம கோவம் போய்டும. ♡♥

கவிதைகள் உலகம் ..smdsafa..

நான் மட்டும் தனியாக (ஒரு காதலனின் கண்ணீர்)




நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா-அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியைக் மடித்து முதல் வேட்டியும் கட்டிக் கொண்டு, சந்தித்தோம் – பொங்கி வழிந்தக் கூச்சத்துடன், ஒரு திருவிழா நாளில்…

குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய், ”இனிமே, நான் உன்ன ‘டா’ போட்டுக் கூப்பிட மாட்டேன்..” ♥

“ஏன் ?”

“மாட்டேன்னா… மாட்டேன்”

”அப்போ இனிமே நானும் உன்ன ‘டீ’ போட்டுக் கூப்பிடக் கூடாதா?”

“இல்லேல்ல… நீ கூப்பிடலாம்… கட்டிக்கப் போறவள பின்ன எப்டி கூப்டுவியாம்?” ♥ என்று சொல்லிக்கொண்டு, நாக்கைக் கடித்துக் கொண்டாய்.. உன் வெட்கத்தில், மாந்தோப்பில் இருந்த மாங்காய்களெல்லாம், சிவந்துப் போயின…

இன்னொரு அமாவாசை நாளில், என் அக்கா குழந்தைக்கு நான் சோறூட்டுகையில், நிலவைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தது குழந்தை… மாடியில் நின்றிருந்த உன்னைக் காட்டி, “அதோ பார்.. நிலா ♥ ” என்று குழந்தைக்கு நான் சோறூட்டியதைப் பார்த்துவிட்ட நீ, அடுத்த நாள் விடிந்தும் விடியாதப் பொழுதில், ஓடி வந்து என்னை முத்தமிட்டதும் அந்த மாந்தோப்பில் தான்… ♥

பிறிதொரு வருடத்தில் அதோ மாந்தோப்பில்தான், “என்னை மறந்துடு ” என்று அழுதாய்… அதோடு முடிந்துப் போனது எல்லாம்… 

இப்போது உன்னை ‘இந்தா’ என்று அழைக்க ஒரு கணவன் இருக்கிறான்…

’அம்மா’ என்று அழைக்க இரு குழந்தைகளும் இருக்கின்றனர்…

ஆனா,
“ஏண்டா கல்யாணம் வேணாங்கிற?” என்று கெஞ்சி அழும் என் அம்மாவுக்கு மட்டும் நான் மகனாயில்லை…


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஈர்க்கிறாய்



நீ பார்க்காத நேரங்களில் உன்னோடு,
பவனி வந்துகொண்டுதானிருன்தேன்,
உன் நிழலாய் !
நீ நினைக்காத நிமிடங்களில்,
உன்னோடுதானிருந்தேன்,
உன் தொண்டைக்குழியிறங்கும் எச்சிலாய் !
நீ தீண்டாத மணித்துளிகளில்,
உன்னோடுதானேயிருந்தேன்,
நரகமென எரியும் விரகமாய் !
நீ தூங்காத சமயங்களில்,
உன்னுடனேயே இருந்தேன்,
உன் உறக்கம் பறித்த சாபமாய் !
எனக்கோ..........................!!
எல்லாமுமாய் நீயிருந்தாய் எந்தநேரமும் !
ஐம்பூதங்களின் அர்த்தமாய் !
அதில் ஊசலாடிடும் அற்பமாய் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

இரவை எதிர்ப்பார்த்து



கனவிலாவது வருவாய் என உன்னை எதிர்ப்பார்த்து காத்திருந்து........
இன்றும் ஏமாற்றத்துடன் தள்ளினேன் இரவை !

விடுதலையானது இரவு,
உறங்க மறந்துவிட்டேனோ என பெருமூச்சுடன் நான்......
நாளைய இரவை எதிர்ப்பார்த்து........!


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஆண் வர்க்கம்



எனக்கென்று படைக்கப்பட்ட நீ !
எப்படி எனக்குப் பிடிக்காத,
விசயங்களைச்செய்யலாம் ?
எனக்கான மாற்றங்களைத்தவிர்க்கலாம் ?
எனக்கு பிடித்த நிறத்தை உடுத்தாமல்,
எனக்கு பிடித்த உணவைச்சுவைக்காமல்,
உன்னவன் என்று என்னைக் கொண்டாடுவதில்,
என்ன அர்த்தம் இருக்கிறது பெண்ணே ?
உனக்காக வாழ்கிற எந்தனது எண்ணங்களை,
உச்சிமுகர்ந்து நடைமுறைப்படுத்தாமல்,
உன்போக்கிலேயே நடந்தால்,
என்னடி அர்த்தம் நாம் வளர்த்த காதலுக்கு ?
நான் உனக்கென்று ஆகி வருடக்கணக்கானபின்,
உற்றுநோக்குகிறேன் உன்னை !
உனக்குப் பிடித்தவைகள் எனக்கு பரிச்சயமில்லாதவைகள் !
நான் பிடிக்காதென ஒதுக்கிய விசயங்கள் !
நான் கேட்கிறேன் ?
என்ன விசயத்தில் ஒத்துப்போகிறாய் நீ என்னுடன் ?
என் கனவுகளை கொலுவில் ஏற்றாமல்,
கொள்ளி வைக்கிறாயே அனைத்திற்கும் மொத்தமாய் !
ஆசைகளை நிராசைகளாக்கவா நாயகியானாய் எனக்கு ?
மனது ஆறாத ரணங்கள் எனக்குள் உன்னால் !
எங்கே போனது எனக்கான உனது வாழ்க்கை ?
மொத்தத்தில் உயிரெனக்கருதினாலும்,
நீ நினைப்பதேயில்லை எனை உற்றவனாய் !
உனக்காக மூச்சுவிட்டு என்ன பிரயோஜனம் எனக்கு ?
தயங்கி ஒதுங்காமல் பளிச்சென்று பதிலைச்சொல் !
எனக்காக வாழ்வதினும் பெரிதாய்,
என்ன சுதந்திரம் வேண்டிக்கிடக்கிறது பெரிதாய் உனக்கு ?
அனைத்தையும் ஒதுக்கி வந்து அடை சரணாகதி !
எனை உணர்ந்து அம்மணி !
ஆண் உன் ஆதாரசுருதி !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அன்புடையவளே



நீயாய் அழைக்கும்வரை,
நானாய் வரமாட்டேன் !
என்ற கர்வம் தலைதூக்கியிருந்தால்,
நீ யாரோ நான் யாரோ?
என்ற நிலை வந்திருக்கும் நம் உறவுக்கு !
நீ போனால் பின்னாலே வந்தும்,
நான் போனால் நானே தணிந்தும்,
வீண்போகாமல் காத்தேன் அன்பை !
அதனின்பால்,
நீ எந்தன் எல்லைகளுக்குள்,
நான் உந்தன் தொல்லைகளுக்குள் !
தெரிந்துகொள்ள உன் கவனத்திற்கு,
இங்கே குளிர்ந்தே கிடக்கிறது,
நம் காதலெனும் மோகவெளி !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

எதிர்பார்கிறேன்




எதிர்பார்ப்புகள் இல்லை என்றால் வாழ்வில் அர்த்தமே இல்லை..

எதிர்பார்கிறேன் என்றும் உன்னிடம் இந்த அழகான அன்பை மட்டும்...!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காவியம்



கலங்கிய
இதயத்துக்கு
கலங்கரை
விலக்கமானால் ...

இதயத்தில்
ஒரு
காவியமாய்
நீ
இருப்பாய் !!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் இதயத்தின் உயிரோட்டம்




என் இதயத்தில்

ஊஞ்சல் கட்டி,

நித்தமும் ஆடுபவளே...!!!

நிறுத்திவிடாதே

உன் ஆட்டத்தை....!!!

நின்று விடும்

என் உயிர் ஓட்டம்...!!!


கவிதைகள் உலகம்

           ..smdsafa..

ஆண் என்பவன் யார்?


எல்லோரும் பெண்களை பற்றி படித்திருப்பீர்கள்...
இப்போது ஆண்களைப்
பற்றியும் கொஞ்சம் தெரிந்து கொள்வோம்...
ஆண் என்பவன் யார்?

ஒரு ஆண் என்பவன்
இயற்கையின்
மிக அழகான
படைப்புகளில்
ஒன்றாவான்.
அவன்
விட்டுக்கொடுத்த
லை மிகச்
சிறிய
வயதிலேயே செய்யத்
தொடங்கி விடுகிறான்,
அவன் தன்
சாக்லெட்டை தன்
சகோதரிக்காக
தியாகம் செய்கிறான்.
பின் தன் காதலை தன்
குடும்ப
நிலையை எண்ணி
தியாகம் செய்கிறான்.
தன்
மனைவி மற்றும்
குழந்தைகள்
மீதான
அன்பை இரவுகளில்
நீண்ட
நேரம் வேலை செய்வதன்
மூலம்
தியாகம் செய்கிறான்.
அவன் அவர்களின்
எதிர்காலத்தை வங்கிகளில்
கடன்
வாங்குவதன் மூலம்
உருவாக்குகிறான்
ஆனால்
அதை அவர்களுக்காக
திருப்பிச்
செலுத்த தன் வாழ்நாள்
முழுதும்
கஷ்டப்படுகிறான்
எனவே அவன்
தன் மனைவி மற்றும்
குழந்தைகளுக்காக
எந்தவித
குறையும் சொல்லாமல்
தன்
இளமையை தியாகம்
செய்கிறான்.
அவன் மிகவும்
கஷ்டப்பட்டாலும்,
தன் தாய், மனைவி, தன்
முதலாளி ஆகியோரின்
இசையை (திட்டுகள்)
கேட்க
வேண்டியுள்ளது.
எல்லா தாயும்,மனைவியும

முதாலாளியும்
அவனை தங்கள்
கட்டுப்பாட்டுக்குள்
வைக்க
முயற்சிக்கின்றனர்.
இறுதியில்
மற்றவர்களின்
சந்தோசத்திற்காக
விட்டுக்கொடுத்த
ுக் கொண்டிருப்பதன்
மூலம் அவன்
வாழ்க்கை முடிகிறது.
பெண்கள உங்கள்
வாழ்வில்
ஒவ்வொரு ஆணையும்
மதியுங்கள்.
அவன் உங்களுக்காக
என்ன தியாகம்
செய்துள்ளான்
என்பதை நீங்கள்
எப்போதும் அறியப்
போவதில்லை.
அவனுக்கு தேவைப்படும்போது
உங்கள்
கரங்களை நீட்டுங்கள்
அவனிடமிருந்து இருமடங்காக
நீங்கள்
அன்பை பெறுவீர்கள்.
ஆண்களுக்கும்
உணர்வுகள் உண்டு,
அதையும் மதியுங்கள்.
அமைதி கொள்வோம்.
இது ஆண்களின்
அன்பு வேண்டுகோள்.


கவிதைகள் உலகம் ..smdsafa..

வெகுளி



வெளிப்படையாய் மறுத்து வெகுளியாய் நடித்து,
நீ எனை தூரவீசிப்போனது அனைவர்க்கும் தெரியும் !
அதையே காரணமாகக்கொண்டு,
என் காதலைக்கலைத்துவிடுவேன்,
என்று நினைத்தது உன் முட்டாள்தனம் !
பழகிய எனக்கு தெரியாதா உன் புத்தியின் நர்த்தனம்?
நானும் விலகினேன் உன் விலகலின் அடிதொட்டு !
காரணம் நாம் கண்ணிமைகளுக்குள் காத்துவளர்த்த காதல் !
அதுவே கழுத்தை நெரிக்காமல் கயமை பொருத்தாமல்,
சுதந்திரமாய் பறக்கவிடச்சொன்னது உனை எனைவிட்டு !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

யோசிக்கிறேன்



நீ கண்ணீர் சிந்துவதில்
இல்லையடி வருத்தம்!
இத்தனை நாட்களாய்
என்னால் விழமுடியாத
அந்த விழிக்குள்
சிறு தூசி எப்படி
விழுந்தது என்று தான்
யோசிக்கிறேன்!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதலில் வீழ்ந்தது

தோழியே..! உன்னைச் சந்தித்தது விதி…
உன்னுடன் நட்பு கொண்டது ஒரு வாய்ப்பு. ஆனால்
உன்னிடம் காதலில் வீழ்ந்தது,
என்னையும் அறியாமல் நடந்தது,
என்னால்கட்டுப்படுத்த முடியாமல் போனது.

                                                                       அதுதான் காதல்….!

கவிதைகள் உலகம் ..smd safa..

இதுவா ஆணாதிக்கம்?


சிலநேரம் நீ மற்றவர் முன்பு,
மரியாதை குறைவாய் பேசினால்,
கொடுங்கோபம் நெஞ்சை ஆட்கொள்கிறது
அதேநேரம்,
உன் அருகே தனியே இருக்கும் சமயம்,
நீ மரியாதையாய் பேசினால்,
அங்கே ஆத்திரம் அலைமோதுகிறது,
அன்பே,
இதுவா ஆணாதிக்கம்?


கவிதைகள் உலகம் ..smd safa..

என் சிந்தனையில் நீ

உறவுகள் பலர்
இருந்தாலும்
உணர்வுகள்
உன்னிடத்தில் தான்
நினைவுகள் பல
இருந்தாலும்
நினைப்பதும்
உன்னை மட்டும் தான்

கவிதைகள் உலகம் ..smd safa..

ஒரு உண்மை காதல்


அவள் ஒரு பேதை
நான் ஒரு போதை
அவளுக்கு திருமணமெனும்
ஆகி இருந்தால்
என் மூச்சு நின்று
போய் இருக்கும்
நீயோ முதிர் கன்னியாய்
நானோ முற்றும் துறந்த
துறவியாய்



கவிதைகள் உலகம் ..smd safa..

தண்ணீர் இல்லை கண்ணீர்


காதலன்களை ஒன்று கூட்டுங்கள்.
காவிரியில் தண்ணீர் இல்லையாம்
கண்ணீராவது ஓடட்டும்!


கவிதைகள் உலகம் ..smd safa..

காற்றில் எழுதுகிறேன்


உனக்காய்
எழுதும் கவிதைகளை
இரக்கமின்றி -நீ
கிழிப்பதினால்
இப்போதெல்லாம்...
காற்றில் எழுதுகிறேன்
கண்டிப்பாய் நீ
சுவாசிப்பாய் எனும்
நப்பாசையில்


கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;