தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

ஆண் வர்க்கம்



எனக்கென்று படைக்கப்பட்ட நீ !
எப்படி எனக்குப் பிடிக்காத,
விசயங்களைச்செய்யலாம் ?
எனக்கான மாற்றங்களைத்தவிர்க்கலாம் ?
எனக்கு பிடித்த நிறத்தை உடுத்தாமல்,
எனக்கு பிடித்த உணவைச்சுவைக்காமல்,
உன்னவன் என்று என்னைக் கொண்டாடுவதில்,
என்ன அர்த்தம் இருக்கிறது பெண்ணே ?
உனக்காக வாழ்கிற எந்தனது எண்ணங்களை,
உச்சிமுகர்ந்து நடைமுறைப்படுத்தாமல்,
உன்போக்கிலேயே நடந்தால்,
என்னடி அர்த்தம் நாம் வளர்த்த காதலுக்கு ?
நான் உனக்கென்று ஆகி வருடக்கணக்கானபின்,
உற்றுநோக்குகிறேன் உன்னை !
உனக்குப் பிடித்தவைகள் எனக்கு பரிச்சயமில்லாதவைகள் !
நான் பிடிக்காதென ஒதுக்கிய விசயங்கள் !
நான் கேட்கிறேன் ?
என்ன விசயத்தில் ஒத்துப்போகிறாய் நீ என்னுடன் ?
என் கனவுகளை கொலுவில் ஏற்றாமல்,
கொள்ளி வைக்கிறாயே அனைத்திற்கும் மொத்தமாய் !
ஆசைகளை நிராசைகளாக்கவா நாயகியானாய் எனக்கு ?
மனது ஆறாத ரணங்கள் எனக்குள் உன்னால் !
எங்கே போனது எனக்கான உனது வாழ்க்கை ?
மொத்தத்தில் உயிரெனக்கருதினாலும்,
நீ நினைப்பதேயில்லை எனை உற்றவனாய் !
உனக்காக மூச்சுவிட்டு என்ன பிரயோஜனம் எனக்கு ?
தயங்கி ஒதுங்காமல் பளிச்சென்று பதிலைச்சொல் !
எனக்காக வாழ்வதினும் பெரிதாய்,
என்ன சுதந்திரம் வேண்டிக்கிடக்கிறது பெரிதாய் உனக்கு ?
அனைத்தையும் ஒதுக்கி வந்து அடை சரணாகதி !
எனை உணர்ந்து அம்மணி !
ஆண் உன் ஆதாரசுருதி !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;