நீயாய் அழைக்கும்வரை,
நானாய் வரமாட்டேன் !
என்ற கர்வம் தலைதூக்கியிருந்தால்,
நீ யாரோ நான் யாரோ?
என்ற நிலை வந்திருக்கும் நம் உறவுக்கு !
நீ போனால் பின்னாலே வந்தும்,
நான் போனால் நானே தணிந்தும்,
வீண்போகாமல் காத்தேன் அன்பை !
அதனின்பால்,
நீ எந்தன் எல்லைகளுக்குள்,
நான் உந்தன் தொல்லைகளுக்குள் !
தெரிந்துகொள்ள உன் கவனத்திற்கு,
இங்கே குளிர்ந்தே கிடக்கிறது,
நம் காதலெனும் மோகவெளி !!
கவிதைகள் உலகம் ..smdsafa..