வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வாழ்க்கை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
நான் தேடும் முகவரி எல்லாம்
உன் இதயம் மட்டும்தான்
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே...பழிவாங்கப் புறப்பட்டவனின் விழிகளில்,
கொஞ்சம் ஒளிந்திருந்தது ஈரம் !
ஆனாலும் அது எப்போதும்,
அக்கினிக்குளம்பாய் கனன்றுகொண்டே !
நிலையுணர்ந்து அதை தணிக்க யோசிக்காமல்,
தீக்கங்குகளை அள்ளிப்போட்டுக்கொண்டே !
தவறாமல் உறவுக்கழுகுகள் !
அவனையே பலிகொடுக்க !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
===============================
இதே நிலமையில் என் காதல்
உன்னால்
உணரப்படுமாயின்
நான்
இக்கணமே தயாராகி விட்டேன்...!
என் பிறந்தநாளன்று சவமாய்
கிடக்கவும் தயங்க மாட்டேன்...!
================================
================================
உன்னையின்றி யாரையும்
என்னால் நினைத்து பார்க்கவும்
முடியாது..
உன்னை யாருக்காகவும்
விட்டுக்கொடுக்கவும்
என்னால் முடியாது அன்பே..!
================================
=================================
உண்மையான அன்பு உள்ளத்தில்
மட்டுமல்ல
உணர்வுகளிலும் கலந்திருக்க
வேண்டும்
அப்பொழுதுதான் உறவுகளில்
கூட
ஒரு உயிரோட்டம் இருக்கும்......!
எனக்கு தான் அந்த
கொடுப்பனவு இல்லை...
அதனாலேயே நான்
எனக்கு கொடுத்த இந்த முடிவு...!
=================================
=================================
சின்ன சின்ன குறும்புகள்
சின்ன சின்ன சண்டைகள்
பெரிய பெரிய மாற்றத்தை
வாழ்க்கையில் ஏற்படுத்துகின்றன
=================================
கவிதைகள் உலகம் ..smdsafa..
கல்லுடைக்கிறாள் மண் சுமக்கிறாள்,கட்டிடவேலை நீர் இறைக்கிறாள் !
கூவிவிற்கிறான் பரிமாறி நிற்கிறான்,
ஓடியாடி எடுபிடியும் ஆகிறான் !
பள்ளி செல்வதை மறந்துபோய்விட்ட,
தெளிவு வராத சிறுமியும் சிறுவனும் !
பால்குடி மறந்த சிலவருடத்தில்,
தேள்கடியாக நாட்கள் மாறினார் !
பண்டங்கள் எது தின்றாலும்,
அங்கே ஒரு மழலை பார்த்தால்,
உடனேயே அள்ளித் தந்திடும்,
தன்மைகள் வளர்த்த கரங்கள் !
தமதாக கொண்டதுதானே,
இதுவரையிலும் எங்களின் மனங்கள் !
ஆனால்,
விளையாடும் மழலைக்கூட்டம்,
வியர்வையைத்துடைக்கும் அவலம் !
வெயில் மழையுடன் போராடித்தான்,
வெரும்கால்கல் நிறைக்கும் கவளம் !
மாலை வரும் கூலிக்காக,
காலைவரும் முன்னர் எழுந்து,
கவனங்கள் தொலைக்கும் பிறவிகள் !
காலம்வரும் என்றேகூட,
காத்திருக்கத் தெரியா உறவுகள் !
வயதுக்குமீறிய சுமைகளை,
ஏற்கின்ற மெல்லிய விரல்கள் !
கண்டதும் எம்பிகுதிக்கும்,
இமைகளை உடைக்கும் திரள்கள் !
ஆகவே பொறுமைகாட்டு,
அன்பினில் வளர்ந்த மனிதா !
அழித்திட முற்படுகின்றாய்,
வளராத ரேகைகள்தம்மை !
தெரிந்தே ஏன் சிதைக்கிறாய் நீ?
நடைபயிலும் பாதைகள்தம்மை !உற்று நோக்கிடின் எங்கெங்கினிலும்,
திரிந்தபடியே உழைக்கும் மழலைகள் !
கந்தலாடை தந்தே சிலைகளை,
சிதைப்பதென்ன உந்தன் கயமைகள் !
தவறு குற்றம் என்றே சொல்லி,
விலகி ஓடும் உங்கள் கொடுமைகள் !
பாவம் சாபம் என்பதை உணர்ந்தும்,
பாதகங்கள் செய்யும் எருமைகள் !
வளைக்காதே வானவில்களை !
உடைக்காதே குருத்தெலும்புகளை !
சிதைகாதே சின்னக் கடவுள்களை !
படைக்காதே பாவப் பூமியை !
மழலையிடம் மழலை ஆகு !
மடியினிலே விடியல் தேடு !
நிம்மதியை அவரிடம் நாடு !
அவர் வளர நீயும் ஓடு !
மழலைகள் வார்த்திடும் தன்னை !
வருங்காலம் வாழ்த்திடும் உன்னை !
கவிதைகள் உலகம் ..smdsafa..
1.மிகவும் உடல் பலமிழந்த நேரத்தில் உங்களை தாங்கி பிடிக்கும் கைகளை கண்டுபிடியுங்கள்.
2.எல்லோரும் பார்க்க மறுக்கும் நேரத்தில் உங்களை பார்க்க விரும்பும் கண்களை கண்டுபிடியுங்கள்.
3.உங்களின் மோசமான நிலைமையிலும் உங்களை நேசிக்கும் இதயத்தை கண்டுபிடியுங்கள்.
இவைகளை நீங்கள் கண்டுபிடித்தால் நேசம் உங்களை கண்டுபிடித்திருக்கும் !
கவிதைகள் உலகம் ..smdsafa..
வறண்ட நிலத்தின் வெடிப்புகள்,
தண்ணீர்கேட்டு தவம்கிடந்தது வானம்பார்த்து !
மழை வருமோ இல்லையோ ?
மனம் அழுதது அந்த அவலநிலம் பார்த்து !
எங்கோ எனக்குள் ஒரு ஜீவன் கெஞ்சிக்கூத்தாடியது !
ஆண்டவனே இறையே பிதாவே !
வறட்சிமட்டும் வேண்டாமே நாங்கள் வாழும் உலகுக்கு !
வெந்து சிதைகிறது எமை சுமக்கும் அன்னைமடி !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
வரிசைகட்டி வாகனத்தில் நோஞ்சான் மாடுகள்,
சாலையோர ஜீவராசிகளை ரசித்தபடியோ வெறுத்தபடியோ !
தாம் வாழத்தகுதியற்றவர் என மனிதன் நிர்ணயித்துவிட்டான் !
எனும் பயங்கரத்தை அறியா பயணத்தை மேற்கொள்பவர்களாய் !
எங்காவது இறக்கி அங்கேயே முடிக்கப்படுவோம் என்பதறியாமல் !
கொன்றால் பாவம் தின்றால் தீரும் என்ற கொடூர எண்ணகர்கள் நமக்குள் !
நீ உதவாதுபோனால் உன்னையே வெட்டித்தின்ன சம்மதிக்குமா மதி ?
ஆறறிவு படைத்தது உழைத்துப்போட்ட ஐந்தறிவை அடித்துப்புசிக்கவா ?
மனிதா ! மனிதனா நீ ?
நாடுகேட்காதுபோனாலும் நாளை ஒரு மாடு கேட்கும் !
உயிர் வதைக்கும் உனை முட்டித்தூக்கும் !!
கவிதைகள் உலகம் ..smdsafa..
உமது இரைச்சல்கள் இதமாய் வந்து கலந்ததுண்டு,
என் படுக்கையில் தூக்கத்தினூடே !
அந்தரத்தில் தொங்கும் தந்திக்கம்பிகளில்,
ஒய்யாரமாய் அமர்ந்திருக்குமே உமது கூட்டம் !
மொட்டைமாடிக்கு வரும்போதெல்லாம் ஓய்வின்றி,
வலமும்இடமும் பறந்து போக்குக்காட்டுவீரே கவனத்திற்கு !
எந்த இடத்தையும் பற்றியமர்ந்து குட்டி வாலாட்டும் கூட்டமே !
எங்கே போனீர் எமைக்கடந்து இங்கே இல்லாமல் !
துள்ளலாட்டம் போட்ட உமைக்கான தள்ளாட்டம் போடுது மனது !
அங்குமிங்கும் தேடுகிறேன் தொலைந்தபொருளை கண்டிடும் ஆர்வத்தில் !
காட்டவேண்டும் உமது குழுவை எமது குழந்தைக்கூட்டத்திற்கு !
காதில் விழுகிறது !!
"சிட்டுக்குருவிகள் அழிந்துவிட்டன"
எனும் செய்தி பற்றவைத்த தீயாய் !
விம்மிப் புடைக்கிறது நெஞ்சம் !
மரணம் வரலாம் பிறப்பு ஈடுசெய்யும் !
தனிமை வரலாம் இனிமை ஈடு செய்யும் !
இனம் அழியும் கொடுமை எந்த முடிவைத்தரும் ?
தடயங்களைத் தேடவேண்டுமா இனி குருவிகளுக்கு ?
அவைகளை குழந்தைகளாய்ப்பார்த்து குழந்தையாகியிருக்கிறேன் !
அச்சிறிய ஜீவன்களிடம் சிந்தை சிறைப்பட்டதும் உண்டு !
சென்றுவிட்ட உமக்காக நின்றுபெய்கிறது கண்ணீர் மழை !
என்செய்து எப்படி கொணர்வது உணர்வது உமது அருகாமையை ?
எதன் வளர்ச்சியில் துவங்கியது உமது வீழ்ச்சி ?
கண்ணெதிரே அழிந்துவிட்டவரே !
காணக் கிடைப்பீரா இனி ?
உறவைத்துண்டித்த பறவைகளே சிட்டுக்குருவிகளே !!
"உள்ளத்தில் வெறுமையாகவே உமக்கான இடம்"
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
உன் பிறந்தநாளன்று முதலாளாய் 12 மணிக்கே வாழ்த்தவில்லையென சண்டைக்கு வருகிறாய். நீ பிறந்த நேரத்தில் வாழ்த்துவதற்காய் நான் காத்திரு...
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
அன்பே! அழகுக்கு இலக்கணம் தெரியவில்லை உன்னை காணும் வரை.. கவிஞன் ஆனேன் பூ வாடி விடும் அதன் வாசமும் வாடாது.. நாம் கொண்ட நேசமும் மாறாது.. ...
-
நீ நேசிக்கும் இதயம் உன்னை திட்டினால் கவலைப்படாதே.. ஏனென்றால், உன்னை காயப்படுத்தும் முன்பே அது கவலைப்பட்டிருக்கும்.. கவிதைகள் உலக...
-
கடந்து செல்லும் கன்னியின் மேலாடையின் சிறு பகுதி மேலேபடும் போது அவள் மெல்லத் தொடும் சிலிர்ப்பு அறிந்து கொள்ளலாம் அவள் அணியும் ஆடைக்கு...








.jpg)

.jpg)
.jpg)
.jpg)









- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA