தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

நான் மட்டும் தனியாக (ஒரு காதலனின் கண்ணீர்)




நாமிருவரும் சின்னஞ்சிறு வயதில், அம்மா-அப்பா விளையாட்டு விளையாடிய அதே மாந்தோப்பில்தான், நீ உன் அம்மாவின் சேலையைக் கிழித்து முதல் தாவணியும், நான் என் அப்பாவின் வேட்டியைக் மடித்து முதல் வேட்டியும் கட்டிக் கொண்டு, சந்தித்தோம் – பொங்கி வழிந்தக் கூச்சத்துடன், ஒரு திருவிழா நாளில்…

குனிந்த தலை நிமிராமல் நீ அப்போது சொன்னாய், ”இனிமே, நான் உன்ன ‘டா’ போட்டுக் கூப்பிட மாட்டேன்..” ♥

“ஏன் ?”

“மாட்டேன்னா… மாட்டேன்”

”அப்போ இனிமே நானும் உன்ன ‘டீ’ போட்டுக் கூப்பிடக் கூடாதா?”

“இல்லேல்ல… நீ கூப்பிடலாம்… கட்டிக்கப் போறவள பின்ன எப்டி கூப்டுவியாம்?” ♥ என்று சொல்லிக்கொண்டு, நாக்கைக் கடித்துக் கொண்டாய்.. உன் வெட்கத்தில், மாந்தோப்பில் இருந்த மாங்காய்களெல்லாம், சிவந்துப் போயின…

இன்னொரு அமாவாசை நாளில், என் அக்கா குழந்தைக்கு நான் சோறூட்டுகையில், நிலவைக் காட்டச் சொல்லி அடம்பிடித்தது குழந்தை… மாடியில் நின்றிருந்த உன்னைக் காட்டி, “அதோ பார்.. நிலா ♥ ” என்று குழந்தைக்கு நான் சோறூட்டியதைப் பார்த்துவிட்ட நீ, அடுத்த நாள் விடிந்தும் விடியாதப் பொழுதில், ஓடி வந்து என்னை முத்தமிட்டதும் அந்த மாந்தோப்பில் தான்… ♥

பிறிதொரு வருடத்தில் அதோ மாந்தோப்பில்தான், “என்னை மறந்துடு ” என்று அழுதாய்… அதோடு முடிந்துப் போனது எல்லாம்… 

இப்போது உன்னை ‘இந்தா’ என்று அழைக்க ஒரு கணவன் இருக்கிறான்…

’அம்மா’ என்று அழைக்க இரு குழந்தைகளும் இருக்கின்றனர்…

ஆனா,
“ஏண்டா கல்யாணம் வேணாங்கிற?” என்று கெஞ்சி அழும் என் அம்மாவுக்கு மட்டும் நான் மகனாயில்லை…


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;