வெளிப்படையாய் மறுத்து வெகுளியாய் நடித்து,
நீ எனை தூரவீசிப்போனது அனைவர்க்கும் தெரியும் !
அதையே காரணமாகக்கொண்டு,
என் காதலைக்கலைத்துவிடுவேன்,
என்று நினைத்தது உன் முட்டாள்தனம் !
பழகிய எனக்கு தெரியாதா உன் புத்தியின் நர்த்தனம்?
நானும் விலகினேன் உன் விலகலின் அடிதொட்டு !
காரணம் நாம் கண்ணிமைகளுக்குள் காத்துவளர்த்த காதல் !
அதுவே கழுத்தை நெரிக்காமல் கயமை பொருத்தாமல்,
சுதந்திரமாய் பறக்கவிடச்சொன்னது உனை எனைவிட்டு !!
கவிதைகள் உலகம் ..smdsafa..