என் வாலிப வானம்
அமாவாசையானது
நிலவு நீ இல்லாமல்
என் இதயப் படகு
தவிக்கிறது
துடுப்பு நீ இல்லாமல்
என் இளமைச் சோலை
மணம் வீசவில்லை
மலர் நீ இல்லாமல்
என் வாழ்க்கைச் சாலை
வெறிச்சோடிக் கிடக்கிறது
வாகனம் நீ இல்லாமல்
ஆம்! தொடர்கின்றது
என் தனிமைப் பயணம்
ஒரு கணம் ஒரு யுகமாய்
ஒவ்வொரு பொழுதும் சோகமாய்..!
கவிதைகள் உலகம் ..smdsafa..