பிறந்தநாள் பரிசு ..
பெண்ணாய் பிறந்தாய்
பெண்மை அடைந்தாய்
இவ் பதினைந்து வயதில்
பல புதுமை கண்டாய் ..
உன் கல்விக்குதான்
பாலம் இடும் வயது
காதலுக்கோ கெட்ட
காலம் இது ..
பதினாறு வயது இனி பருவங்கள்
மாறலாம்
உருவங்கள் திரளலாம் ..
ஆனால்
என் மீது உன்
அன்பை அளந்துவிடதே ..
உன் சிரிப்புதான் நீ
கொடுக்கும் சீதனம் .
நீ அழுதால்
உலகிற்கே துக்கதினம்
அன்று ..
நல்லவர்
என்று எல்லாரையும்
நம்பி விடாதே
கெட்டவர்
என்று எல்லாரயும்
விட்டு விடாதே !
உன்னை அறிந்தவன்
நான் என்னும்
உலகை அறியவேண்டும்
நீ ..
ம்ம்ம்
உனக்கு இன்று பிறந்தநாள் ..
உன்னிடம்
கொடுக்க என்னிடம்
இருப்பது என்
கவிதைகள் தான் ..
வெறும் வார்த்தைகள்
என்று எறிந்துவிடதே!
உனக்கு புரியாத சில
விடயத்தை புரிய
வைக்க
முயல்கிறேன் ..
புரிந்துவிட்டால்
உனக்கே புகழ் ..
பின்குறிப்பு =:
என்னை நம்பு என்று சொல்ல
வில்லை
எதையும்
நம்பாதே என்பதே என்
வாதம் ..♥ ♥ ♥ wish your happy
birthday ... :)
கவிதைகள் உலகம் ..smd safa..