ஓட்டை ஜோப்பில் காலணா இல்லாவிட்டாலும்
கால்கள் தரையில் நிற்காது கனவில் திரிவோம்..
துண்டு பீடிக்கு பிச்சையெடுத்தாலும்
உரத்த குரலில் ஒபாமாவை திட்டுவோம்..
சட்டை கிழிவது பற்றி கவலை கொள்ளாமல்
முதல் காட்சிக்கு முன்டியடிப்போம்..
நூறு பத்தினி கிடைத்தாலும், வேசிக் கிழவி
பின்பல் இளித்துத் திரிவோம்..
மேடையில் பேசினவரையும், ஒப்பனையில்
பேசினவரையும், போதையில் சத்தியம் செய்து
பேசினவரையும் உடனே நம்புவோம்..
பெற்றோர் நலிந்திருக்க, உறவு சுருண்டிருக்க,
எதிர்காலம் இருண்டிருக்க, நண்பன் அவன்
முறை தவறிய காதலுக்காக
காவல் நிலையத்தில் அடிபட்டுக் கிடப்போம்...
நெஞ்சை உயர்த்தி சொல்லுங்கள்'
நாம் தமிழனடா '' நாம் தமிழனடா 'என்று
கவிதைகள் உலகம் ..smd safa..