திருட்டுதனமாய் பார்த்தோம் பயந்து
பயந்து நேசித்தோம் தயங்கி தயங்கி
நேரெதிர் சந்திக்கும் தருணத்திலே
நம் விழிகள் மோதிகொண்டதே..
என்னவளே என்னை காணும் போதெல்லாம்
உன் விழிகளால் பேசினாயே என் விழிகள்
பேசும்போதோ உன் புன்னகையாலே
செய்கைகள் செய்வாயே..
ஊராருக்கு பயந்து ஊமையாய் நேசித்தோமே,
நித்தம் நித்தம் கனவினிலே தனிமையாய்
உன்னோடு பேசினேனே..
பெண்ணே உனக்கு திருமணம் என்றதுமே
ஊமையாய் ஊமத்தங்காயை தின்று ஊர்
எல்லையிலே உறங்கி போனாயே..
வாழவழி தெரியாது தவிக்கிறேனே என்னை
நேசிக்க என் நேசபறவை நீ இல்லையே...
பெண்ணே நம் விழிகள் பேசியதை தென்றலை
தவிர வேறுயார் அறிவார் ஒன்றும் சொல்லாமல்
ஊமையாய் சென்றுவிட்டாயடி..
என்னவளே உன் ஊமை மொழியின் அர்த்தம்
தேடி நாம் சந்தித்த இடமெல்லாம் தேடுகிறேனே
உன் நினைவின் ஏக்கத்தோடு...
காதலுக்கு இறப்பே இல்லை என்பதை நீ
இறந்து நிறுபித்தாயடி என் கனவே காதலோ
என் உள்ளத்திலே வாழ்ந்து உன் கல்லறையிலே
ஓளிர்கிறதே...
என்னை தவிர வேறுயார் அறியமுடியும்...
என்னவளின் நேசிப்பை......
கவிதைகள் உலகம் ..smd safa..
பயந்து நேசித்தோம் தயங்கி தயங்கி
நேரெதிர் சந்திக்கும் தருணத்திலே
நம் விழிகள் மோதிகொண்டதே..
என்னவளே என்னை காணும் போதெல்லாம்
உன் விழிகளால் பேசினாயே என் விழிகள்
பேசும்போதோ உன் புன்னகையாலே
செய்கைகள் செய்வாயே..
ஊராருக்கு பயந்து ஊமையாய் நேசித்தோமே,
நித்தம் நித்தம் கனவினிலே தனிமையாய்
உன்னோடு பேசினேனே..
பெண்ணே உனக்கு திருமணம் என்றதுமே
ஊமையாய் ஊமத்தங்காயை தின்று ஊர்
எல்லையிலே உறங்கி போனாயே..
வாழவழி தெரியாது தவிக்கிறேனே என்னை
நேசிக்க என் நேசபறவை நீ இல்லையே...
பெண்ணே நம் விழிகள் பேசியதை தென்றலை
தவிர வேறுயார் அறிவார் ஒன்றும் சொல்லாமல்
ஊமையாய் சென்றுவிட்டாயடி..
என்னவளே உன் ஊமை மொழியின் அர்த்தம்
தேடி நாம் சந்தித்த இடமெல்லாம் தேடுகிறேனே
உன் நினைவின் ஏக்கத்தோடு...
காதலுக்கு இறப்பே இல்லை என்பதை நீ
இறந்து நிறுபித்தாயடி என் கனவே காதலோ
என் உள்ளத்திலே வாழ்ந்து உன் கல்லறையிலே
ஓளிர்கிறதே...
என்னை தவிர வேறுயார் அறியமுடியும்...
என்னவளின் நேசிப்பை......
கவிதைகள் உலகம் ..smd safa..