ப்ரியமானவனே,.
உன்னில் இருந்து நான் விலகவும் இல்லை,
இனி விலகப்போவதும் இல்லை..
பிரியமான தோழனாக வந்த உன்னை- இன்று
என் கண்கள் எதோ ஒரு எதிர்பார்ப்போடு பார்க்கின்றன..
காரணம் கேட்காதே, எனக்கே தெரியவில்லை ஏன் என்று.
என்னை நினைத்து நானே பயம் கொள்கிறேன்..
என்னை நானே ஏமாற்றிக்கொள்வதாய் உணர்கிறேன்
வாழ்க்கை என்றால் இத்தனை விசித்திரமானதும்,
வேடிக்கையானதும்- என்று
உன்னோடு பழகிய பின்புதான் உணர்கிறேன்..
நண்பனாய் வருகிறாய் நீ,
தோள் சாய வேண்டும் என்கிறேன் நான்..
னை ஏன் இப்படி மாற்றிவிட்டாய்? நான் செய்த தவறுதான் என்ன?
உன்னை நேசித்தது ஏன் தவறா? உன்னை நெருங்கி வந்தது என் தவறா?
கள்வனே, உன்னை நான் பிரியவில்லை, ஆனால் விலகிச்செல்கிறேன் .
உன்னை காயபடுத்தவில்லை,ஆனால்
காலங்களை கடக்க வழி தேடுகிறேன்..
கேள்விகள் கேட்காதே. காரணம்,, இப்போது நானே ஒரு கேள்விக்குறியாகத்தான் இருக்கிறேன்..
கண்களை மூடிக் கட்டிலில் சாய்ந்தால் தோழனாக வந்து தலை கோதுகிறாய்.. மறுபக்கம் ?????? வந்து மார்போடு அணைக்கிறாய்,
தவிக்கிறேன் நான், உணர்விற்கும், உறவுக்கும் மத்தியில் நின்று
மறுபடியும் சொல்கிறேன் உன்னை மறக்கவில்லை நான்..
உன்னோடு பேசிப்பழகிய நாட்கள் இன்றும் என்னுள் நீங்கா நினைவுகளாக.....
நகர்ந்த்து கொண்டு தான் இருக்கின்றன.. இனியும் தொடரும் என்ற நம்பிக்கையோடு நானும் ..................
கவிதைகள் உலகம் ..smd safa..