நீ வேண்டும் என்கையில்
நீ எனக்கு வேண்டும் என்கையில்
நான் என்னை நேசிக்கிறேன்.
நீ என்னை தாண்டி செல்கையில்
உன் வாசம் சுவாசிக்கிறேன்.
உன் உதடுகள் கவிதை வரைகையில்
மனதில் குறித்து கொள்கிறேன்.
உன் கூந்தல் காற்றில் தவழும் போது
நான் என்னை மறக்கிறேன்.
இது தா....ன்.. .கா... தலா?
உயிரை கொள்ளும் அசைவ பூக்களா?
உன் பார்வை அந்த விழும்பில்
நானும் இருந்தால் போதுமே.
உன் வார்த்தை அதில் மிட்ச்ச
சொற்களாய் எச்சம் ஆகிடுவேன்.
இரு இதழ்களின் பிரிவை
உன் புன்னைகை கூட தாங்கிட கூடுமே.
இந்த நிமிடத்திலிருந்து உன்
பிரிவை எண்ணி வாழ்வது கடினமே.
என்னை மந்திரம் செய்தாயோ ?
மனமுன் பின்னல் அலையுதடி.
காதல் தந்திரம் செய்தாயோ
உயிர் என் முன் பிரிந்து வாழுதடி.
கவிதைகள் உலகம் ..smd safa..