பாவாடை சட்டையில்
பள்ளிக்கு வரும் பளிங்கு நிலா நீ!
உன்னால் வகுப்பறை ஒரு
நந்தவனமாய் இருந்தது நிஜம்!
என் வருகைப்பதிவு குறையாமல்
இருந்ததற்கு நீயும் ஒரு காரணம்!
எப்போதும் பள்ளிக்கு
தவறாமல் வரும் நீ
ஒருநாள் வரவில்லை!
நாட்கள் வாரங்களாகியது
நீ வரவேயில்லை!
தகவல் அறிய பொடிசுகள்
அனுப்பி விசாரிக்கிறேன் !
"நீ வயதுக்கு வந்துவிட்டாய்!"
ஆதலால் பள்ளிக்கு முற்றுப்புள்ளி!
இந்தியக் கல்விமுறையை
நீ தான் மிகச்சரியாக விமர்சிக்கிறாய் தோழி!
"வாழ்க்கைக்கு உதவாத
வகுப்பறைக்கல்வி
வயதுக்கு வராதவர்களுக்கு மட்டும்!"
கவிதைகள் உலகம் ..smd safa..