ஒரு சாயங்காலப் பொழுதில்
உன் கண்கள் சிந்தும்
காதல் சாரலில் நனைந்தபடியே
உன்னோடு பேசிக்கொண்டிருக்கிறேன்!
அந்நேரம் உன் சின்னப்பாதம் நோக்கி
சிற்றேரும்பொன்று முன்னேற
நான் அதை கொன்றுவிட எத்தனிக்கிறேன்!
வேண்டாம்!
"உயிரைக் கொல்வது பாவம்" என்று
என்னை தடுக்கிறாய்!
காதல் என்ற பெயரில்
நீ மட்டும் என்ன செய்கிறாய் அன்பே?
கவிதைகள் உலகம் ..smd safa..