நாளை மதியம்
என்னை இம்சிக்கும்
இன்று மதியம்
உன்னைக் கட்டிபிடித்து
உறங்கியது ..
நாளை மதியம்
என்னை இம்சிக்கும்
இன்று உன் முந்தானையில்
தலை துடைத்துக் கொண்டது ..
நாளை மதியம்
என்னை இம்சிக்கும்
இன்று நீ என்னுடன்
பொய்ச் சண்டைப் போட்டது ..
நாளை மதியம்
என்னை இம்சிக்கும்
இன்று உனக்கு
பிள்ளையாய் நான் இருந்தது .
கவிதைகள் உலகம் ..smd safa..