வரை முறையன்றி
எங்கும் வியாப்பித்து
விரிந்து நிற்கும்
கடல்
இதன்
அகலத்தையும் ஆழத்தையும்
இன்னும் அறிந்தவர் யாருமில்லை
மேற்ப் பரப்பில் ஓயாத தளும்பல்கள்
உள்ளே பேரமைதி
உப்பும் உண்டு
முத்தும் உண்டு
எண்ணையும் உண்டு
எரிமலையும் உண்டு
முழுகிப் போன
முகுடங்களும் உண்டு
இன்னும் வெளிவராத
மர்மங்களும் உண்டு
எப்போதும் தீராது அதன் பசி
மிச்சமிருக்கும் கொஞ்ச பூமியையும்
மொத்தமாய் முழுங்க ஒவ்வரு கணமும்
ஓயாமல் கரை எறிக் கொண்டே
இருக்கிறது
சர்வ சக்தி படைத்தது
உயிர்களின் ஆக்கம்
அதனுள் இருந்து தொடங்கியது
அதனுள் முடியும் ஓர் நாள்
கடல்
பொங்கு மாக் கடல்
கவிதைகள் உலகம் ..smd safa..