தோல்வியை கண்டு துவளாதே வாழ்க்கையில்
சாதிக்க வேண்டியது நிறைய உள்ளது.....
தோல்வி காண்பதே வாழ்க்கை அல்ல
அதையும் வெற்றியாக்குவதுதான் வாழ்க்கை.....
இளமை என்பது இலைசருகுபோல
இளமை போனால் திரும்ப வராது.....
நிலவு கூட தேய்ந்து திரும்பவும் வளர்கிறது
ஆனால் நீயோ முயற்சிக்காமல்
வெற்றி காண நினைக்கிறாய்.....
உன் உடலை நனைப்பது வெறும் கண்ணீராய் இருக்ககூடாது
வியர்வை துளிகளாய்தான் இருக்க வேண்டும்.....
உழைத்து வாழ் பிறர் உன்னை மதிக்க வாழ்
அப்போது தானாகவே திறக்கும்
உன் வெற்றிக்கதவு தான திறக்கும்..
கவிதைகள் உலகம் ..smd safa..