என் இதயம் கூடஒரு சுமை தாங்கி தானுன்
அந்த சுமையும் சுகமே அதை நீ தந்ததால்.
வெள்ளை சுடிதாரில் தேவதையாகிறாய்…
பச்சை, நீல வண்ணங்களில் மயிலாகிறாய்…
எப்பொழுது பெண்ணாவாய்?
வாசனையுமுண்டு
வாடுவதுமில்லை
நீ பூத்தப் பூவா? ப்ளாஸ்டிக் பூவா?
மழையில் நனைந்ததும்,
மேகத்தைத் துவட்டிக்கொள்கிறாய்!
மழையில் குடை…
குடைக்குள் நாம்…
நமக்குள் மழை!
கவிதைகள் உலகம் smdsafa.net