எனக்கு விதிக்கப்பட்ட நீள அகலங்களுக்குள்,
வந்து வாழ்வதாயிருந்தால்,
நெளிந்து வளைந்துதான்,
வாழ்ந்தாகவேண்டும் நீ !
நானே உனக்கானவன் என்று நிர்ணயித்துக்கொண்டபின்,
குனிந்துபோவதற்கும் பணிந்துபோவதற்கும்,
தலை சிலுப்பி உச்சுக்கொட்டினால்,
என்ன நிம்மதி நிறையும் நம்மிடையே?
இன்னொன்று தெரிந்துகொள் !!
யோசிக்காமல் தயாரானேன் நான்,
உனக்கான முக்கியத்துவங்களுக்கு !
அட்டைப்பெட்டிக்குள் அடைபட்டிருந்தாலும்,
ஆண்டவனுக்கு சமமாய் உனை நடத்தும் ஆடவனானேன் !
நீ உண்ட மிச்சம் நீ பருகிய எச்சம் என் விருந்தானது !
உன் வெள்ளந்தி வார்த்தைகளே என் பிணிகளின் மருந்தானது !
வாழவந்தபின் உனையே எனை ஆழவந்தவளாய் மதி ஏற்கும் !
என்றாலும் நீ !!
புத்தாடைகளும் பட்டோடாபங்களும்,
வெட்டவெளி மரியாதையும் உட்புக விரும்புவதாயின் !
எட்டாக்கனி இந்த ஏழை அரசன் உனக்கு !!
கவிதைகள் உலகம் ..smdsafa..