உறக்கமில்லை விழிகளுக்கு,
நீ இரக்கமில்லாமல்
உதறிப்போனத்தில் !
தூக்கிஎறிவதும் துஷ்டவார்த்தைகள்
பிரயோகிப்பதும்,
ஆண்மையின் அடையாளங்கள் என எவர்
அறிவுறுத்தினர்?
வனத்திலிருந்து வந்தவர்
என்று இனம்கானமுடிகிறவர்,
எத்தனை எத்தனை பேர் இங்கே !
அழவைப்பதும் அலைகளிப்பதும்
அன்றாடவழக்கம் பலருக்கு,
பின் அவரையே தொழலவைக்கவேண்டி
மாய்ந்துகிடப்பது,
செயற்கையின் சிரிப்பு அல்லவா?
பெண் படைக்கிறவள்,
உன் உயிரை உடலென்னும் கூட்டுக்குள்
அடைக்கிறவள் !
நன்றிக்கடன் பட்டிருக்கிறோம்
அவர்க்கு நாம்,
ஆயுளின்
கடைசி மூச்சு பிரிகிறவரை !
அதையா நினைக்கிறாய் நீ?
அந்திவந்தால் சுந்தரியாகவும்,
விழித்தெழுந்தால்
செக்குமாடாகவும்,
மாற்றத்தானே முயல்கிறாய்
மதியாமல்?
நிமிடங்கள் போதும் அந்தப்பெருந்தீ
நம்மைச்சாம்பலாக்க !
உணராமலேயே கொடுங்கோலனாய்,
வாழ்ந்து சரியச் சம்மதமே நமக்கு !
வேதனைப்படுத்தாதே பெண்ணை !
சோதனைக்கு உள்ளாகும் உன்
சுயமரியாதை !
அடங்கிவாழ் அந்த அற்புத
படைப்பிற்கு !
எதுவும் குறைந்துபோய்விட
ாது இங்கே !
எந்த உயிரின் உச்சபட்ச நிம்மதியும்
எதிலிருக்கிறது தெரியுமா?
காதலியாய் தாரமாய் தங்கையாய்,
தாயாய் தோழியாய் பாட்டியாய்,
மகளாய் மனுசியாய் நல்ல உறவாய்,
ஒரு பெண்
உனை உச்சிமுகர்வதில்தான் !!
கவிதைகள் உலகம் ..smdsafa..