எங்கே தொலைந்து போயின என் கவிதைகள்...
நான்
தேடித்திரிந்து...
தூரம் அலைந்து..
மூழ்கிப்பிறக்கவில்லை,
என் கவிதைகள்.
உன்
ஒற்றைப் பார்வையிலேயே
தானாகப் பிறந்துபோயின
கவிதைகள்.
அறியாமல் பிறந்தாலும்
எனக்குள் ஊறி
என் நினைவாய் மாறி...
உன் நினைவாய்
எழுதிய வரிகள்
எங்கு தொலைந்து போயின இன்று.
உன்னை போலவே
விலகிப் போய்விட்டனவோ...
உன்னை காணாது
காய்ந்து போய்...ஈரமான
என் கண்களின் கண்ணீரோடு
அதுவும் கரைந்து
தொலைந்து போனதோ...
இல்லை உன் வழிதடம் தேடி
கடந்து போனதோ....
எங்கே தொலைந்து போயின
என் கவிதைகள்.
இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் தேடிப்பார்த்துவிட்டேன்....
வரிகள் தொலைந்தது என்றால்.. வார்த்தைகள் எங்கு போயின...
உவமையாய் இருந்த, பூக்களும் தென்றலும் வானவில் மழையும்,
நிலவும் கூட மறுத்துவிட்டன. வரிகளுக்கு வரிகள் நான் வர்ணித்த
வண்ணத்துபூச்சிகள் கூட சொல்ல மறுக்கின்றன.
நான் அமர்ந்து இரசித்த
வாய்கால் ஓடைகளும், கரை ஓர சின்ன மீன்களிடம்
கூட கேட்டுப்பார்த்துவிட்டேன். எங்கே தொலைந்து போயின
என் கவிதைகள்.
விடைகிடைக்காமலே திரிகிறேன்....
எங்கே தொலைந்து போயின என் கவிதைகள். தயவு செய்து நீயாவது சொல்லிவிடு.
கவிதைகள் உலகம் smdsafa.net