நண்பா உனக்காக..நட்பே உனக்காக..
இதுவரை கண்டதில்லை
இதுபோல் நட்பை - என்
இமைகளின் கண்ணீர் சொல்லும் - நான்
ரசித்த அன்பை..
காதலினால் வலித்த நெஞ்சம்
காயம் பட்டு கிடக்கையிலே
மருத்துவனும் நீ அல்ல
மருந்தாய் நீ வந்தாய்..
சிதறிப்போன நெஞ்சமதை
சரி செய்ய நீ துடித்தாய்..
நான் துடித்திருந்த நேரத்திலே
எனை அணைத்து நீ அழுதாய்..
என் உயிரை மீட்டவனே
உணகென்னவென்று நான் செய்வேன்
எங்கிருந்தோ நீ வந்தாய்
என் மூச்சு காற்றில் கலந்துவிட்டாய்..
உன்னை போல் நண்பன் இங்கு யாருக்குண்டு.. இதுபோல் கர்வம் என் நட்புக்குண்டு..
நன்றி என்று சொல்லிவிட நமக்குள் என்ன நட்பா! அப்பப்பா..இது
அதினும் பெரிதப்பா.. கவிதைகள் உலகம் smdsafa.net