அது ஒரு பொன் மாலை நேரம்,
காதலை அவளிடம் சொல்லிய மறுநாள்,
எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் என்னவளின் வருகைக்காக,
வந்தாள்.....!!!!
எப்போதும் என்னை ஓரக்கண்னால் பார்த்து பேசி சிரிக்கும் அவளது விழிகள் இன்று ஏனோ கற்களின் மீது காதல் கொண்டு இருந்தது...!!!!!!!
எப்போதும் என்னை ஏமாற்றும் அவளின் பூவிதழ்களோடு இன்று அவளின் பால்விழிகளும்
சேர்ந்துகொண்டன...!!!
விழி ஏதும் பேசாமல், இதழ் ஏதும் பேசாமல் அவள் என்னை கடந்து போய் விட்டாள்....!!!
அவள் ஸ்பரிசம் பட்ட தென்றல் என்னை பார்த்து ஏளனமாய் நகைத்து கொண்டு இருந்தது.....!!1
கவிதைகள் உலகம் smdsafa.net