நிரந்தர வீட்டை இழந்தவர்கள் நாம்...
நிரந்தர முகவரியை பிரிந்தவர்கள் நாம்...
ஓலை- குடில்களில் கூட வாழ்ந்தவர்கள் நாம்...
மர நிழல்களில் கூட உறங்கியவர்கள் நாம்...
சிறு தறப்பாளை கூட வீடாக்கியவர்கள் நாம்...
மண் குழியினில் கூட உண்டுறங்கியவர்கள் நாம்...
உறவுகளை இழந்தவர்கள் நாம்...
உணர்வுகளும் செத்தவர்களா நாம்...?
இத்தனை தூரம் வந்தவர்கள் நாம்...
அத்தனையையும் மறந்தவர்களா நாம்...?
எங்காவது ஒண்டிப்போய் கையேந்த யாசகர்களா நாம்...?
பாய் கண்ட இடத்தில் படுத்துறங்க பைத்தியங்களா நாம்?
தண்ணி கண்ட இடத்தில் விழுந்துகிடக்க எருமைகளா நாம்...?
கூடபிறந்தவன் எப்படியிருப்பினும் எப்படி நடப்பினும்
உறவென்று வரும்போது துடிக்கிறதே எம் சதை,
அடுப்படி பிரச்சினைகளை அங்காலே வைத்திடுவோம்...
நாமும் உணர்வுகள் சாகாத மனிதரென்பதை நினைத்திடுவோம்...
அதனால் அமைத்திடுவோம் தற்காலிகமாகவேனும்
ஒதுங்குவதற்கு ஓரு வீட்டினை...