என் அம்மா பசு விடம் கறந்து கொடுக்கும் பாலைச் சொம்பில் ஊற்றிக்கொண்டு வந்து, தினமும் உன் வீட்டு வாசல் முன் அதிகாலையில் நிற்பேன். அதை வாங்குவதற்கு உன் வீட்டில் எத்தனையோ வேலைக்காரிகள் இருந்தாலும் நீதான் வருவாய்!
குளித்து முடித்த நீ நடந்து வந்து பால் சொம்பை வாங்கும் கணங்கள்தான் எனக்குத் தேவகணங்கள். என் ஒவ்வொரு நாளும் விடிவது அப்போதுதான்!
பாத்திரத்தில் பாலை ஊற்றிவிட்டு, சொம்பைத் திருப்பித் தருவாய். அந்தச் சொம்பிலிருக்கும் மிச்சத் துளிகள்தான் எனக்கு தேவாமிர்தம். யாருமில்லாத இடம் பார்த்து… தலையை உயர்த்தி, சொம்பைக் கவிழ்த்தால் என் நாக்கில் சொட்டும் அந்த அமிர்தத் துளிகள்!