தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

3011 எ லவ் STORY smdsafa smohamed





3011 எ லவ் STORY  
என் இடப்பக்கம் இருந்த 
பொத்தானை அழுத்தினேன் 
அந்த கால மோகன் பாடல்களாம் 
நன்றாக தான் இருந்தன... 
என்னை அறியாமல் 
என் சில்வர் கன்னங்கள் 
எனக்கு கண்ணீர் வந்ததை 
உணர்தின... 
மனதுக்குள் சாபமிட்டேன் 
மனித பயல்களை..... 
எங்களுக்கு உணர்சிகளை ப்ரோக்ராம் செய்து 
வன்மம் இரக்கம் இத்துடன் 
காதலையும் தந்ததற்கு .........





கவிதைகள் உலகம் smdsafa.net

நண்பா உனக்காக smd safa smohamed


நண்பா உனக்காக..நட்பே உனக்காக..  
இதுவரை கண்டதில்லை 
இதுபோல் நட்பை - என் 
இமைகளின் கண்ணீர் சொல்லும் - நான் 
ரசித்த அன்பை.. 


காதலினால் வலித்த நெஞ்சம் 
காயம் பட்டு கிடக்கையிலே 
மருத்துவனும் நீ அல்ல 
மருந்தாய் நீ வந்தாய்.. 


சிதறிப்போன நெஞ்சமதை 
சரி செய்ய நீ துடித்தாய்.. 
நான் துடித்திருந்த நேரத்திலே 
எனை அணைத்து நீ அழுதாய்.. 


என் உயிரை மீட்டவனே 
உணகென்னவென்று நான் செய்வேன் 
எங்கிருந்தோ நீ வந்தாய் 
என் மூச்சு காற்றில் கலந்துவிட்டாய்.. 


உன்னை போல் நண்பன் இங்கு யாருக்குண்டு.. இதுபோல் கர்வம் என் நட்புக்குண்டு.. 


நன்றி என்று சொல்லிவிட நமக்குள் என்ன நட்பா! அப்பப்பா..இது 
அதினும் பெரிதப்பா..                    கவிதைகள் உலகம் smdsafa.net

அந்தி மாலை smd safa smohamed..


அவள் நான் அந்தி மாலை   


அவள் 
நான் 
அந்தி மாலை 
பிரிக்க முடியாத 
கூட்டணி 
இது அரசியல் 
இல்லை 
காதல் காதல் காதல் 


இது முக்கோணம் இல்லை 
பார்வையின் 
ஒரே கோணம் 
ஒரே வானம் ஒரே மனம்...       கவிதைகள் உலகம் smdsafa.net

தொலைந்து போனது என் கவிதைகள்... smdsafa smohamed


எங்கே தொலைந்து போயின என் கவிதைகள்...  
நான் 
தேடித்திரிந்து... 
தூரம் அலைந்து.. 
மூழ்கிப்பிறக்கவில்லை, 
என் கவிதைகள். 
உன் 
ஒற்றைப் பார்வையிலேயே 
தானாகப் பிறந்துபோயின 
கவிதைகள். 


அறியாமல் பிறந்தாலும் 
எனக்குள் ஊறி 
என் நினைவாய் மாறி... 




உன் நினைவாய் 
எழுதிய வரிகள் 
எங்கு தொலைந்து போயின இன்று. 




உன்னை போலவே 
விலகிப் போய்விட்டனவோ... 
உன்னை காணாது 
காய்ந்து போய்...ஈரமான 
என் கண்களின் கண்ணீரோடு 
அதுவும் கரைந்து 
தொலைந்து போனதோ... 


இல்லை உன் வழிதடம் தேடி 
கடந்து போனதோ.... 


எங்கே தொலைந்து போயின 
என் கவிதைகள். 




இருதயத்தின் ஒவ்வொரு துடிப்பிலும் தேடிப்பார்த்துவிட்டேன்.... 


வரிகள் தொலைந்தது என்றால்.. வார்த்தைகள் எங்கு போயின... 


உவமையாய் இருந்த, பூக்களும் தென்றலும் வானவில் மழையும், 
நிலவும் கூட மறுத்துவிட்டன.   வரிகளுக்கு வரிகள் நான் வர்ணித்த 
வண்ணத்துபூச்சிகள் கூட சொல்ல மறுக்கின்றன. 


நான் அமர்ந்து இரசித்த 
வாய்கால் ஓடைகளும், கரை ஓர சின்ன மீன்களிடம் 
கூட கேட்டுப்பார்த்துவிட்டேன். எங்கே தொலைந்து போயின 
என் கவிதைகள். 


விடைகிடைக்காமலே திரிகிறேன்.... 


எங்கே தொலைந்து போயின என் கவிதைகள். தயவு செய்து நீயாவது சொல்லிவிடு.

கவிதைகள் உலகம் smdsafa.net

அவள் அழகு.. smdsafa smohamed..


சிற்பிக்குள் அடுக்கி வைக்கப்பட்ட முத்துக்கள் 


அவளது பல் வரிசை ...

 
ஆலமரக் கொழுந்தின் மென்மை போன்ற 
மிருதுவான அவளின் கன்னங்கள் ....

 
அவளை மறக்க நினைத்தாலும் நினைக்க தூண்டும் 


காற்றில் அசையும் கூந்தால்...

 
ஐயோ முடியவில்லையே!!!! 



கவிதைகள் உலகம் smdsafa.net

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;