மின் அதிர்வை தாங்க முடிந்த என்னால் ஏனோ உன் விரல் என்னுள் தீண்டியதை தாங்க முடிய வில்லை...
சூரிய ஒளியை நேராக பார்த்த என்னால் ஏனோ உன் விழி அலையை பார்க்க முடிய வில்லை..
மலரின் இனிமை வாசத்தை அறிந்த என்னால் ஏனோ என்னால் உன் பெண்மை வாசத்தை நுகர முடிய வில்லை...
பயணங்கள் பல தொடர்ந்த என்னால் ஏனோ உன் பாத சுவடுகளை தொடர முடியவில்லை...
என்னவளே நீ என் நினைவில் வந்து உரையாடியதை விட , கனவில் வந்து உரையாடியது தான்அதிகம்...
அது தான் என் வாழ்வின் வசந்தம்...
காரணம்...
" தேவதைகள் நினைவில் வருவதை விட கனவில் தான் அதிகம் வருவார்கள் என்று என்னவளே முன்பு ஒரு நாள் நீ என்னிடத்தில் சொல்லி இருந்ததால் "...
* என் கண்ணீரில் அவள் புன்னகை *
கவிதைகள் உலகம் ..smdsafa..