திடீரென இதயம் நின்று விட்டது
யார் காரணமோ..??
இதயம் நின்ற காரணம் அறிந்தால்
காதல் என்ன செய்யுமோ..??
இந்த காதல் என்ன செய்தால் என்ன
நான் கண்டுகொள்ள மாட்டேன்,
எதற்கும் அஞ்சிவிட மாட்டேன்,
துணிந்தே நிற்பேன்,
துயரத்தை இழப்பேன்..!!!
காதல் ரேகை அழித்துவிட்டேன்,
இதய ஓசை தொலைத்துவிட்டேன்,
இருந்தும் என்ன செய்வேன் பெண்ணே
உன் மூச்சுக்காற்றில் என்னை
கொன்று விட்டாய்..!!
இந்த காதல் கழுத்து வரை
என்னை இறுக்கி உயிர் எடுக்கிறதே..!!
அடைத்து வைத்த கடிகாரம் உள்ளே
நேரம் இழந்து தவிப்பதை போல,
உன் விழி ஓரம் பார்த்தே
விண்வெளியில் தவித்தேன் நானே..!!
யார் யோசனையும் கேட்கவில்லை,
சுய பரிசோதனையும் செய்யவில்லை..!!
காதல் என்றால் காதலல்ல
கண்ணீர் தந்து உயிரை உறிஞ்சும்
புதுமுறை வஞ்சனை..!!
வாஞ்சையுடன் அருகே சென்றால்
நஞ்சு தெளிக்கும் விந்தை..!!
காதலின் நிலையை கண்டேன்,
என் நிலை சுயமாய் தெளிந்தேன்,
எவளுக்கோ என்னுயிர் கரைந்து
காதல் சுனாமியில் மூழ்கும் முன்
தப்பி பிழைத்து தடம் கண்டேன்..!!
கவிதைகள் உலகம் ..smdsafa..