நான் செய்தது தவறென்றால்,
நீ செய்ததும் தவறுதான் !
மன்னித்து உறவாடுகிறேன் உன்னிடம் !
உணராமல் இருக்கிறாயே?
உச்சாணிக்கொம்பிலேயே !
இனி என்ன செய்யட்டும் நான்?
தன்மானம் தடவுகிறதே உன் நிராகரிப்பு !
தள்ளிவிட எத்தனிக்கிறாயா?
பிரிவெனும் கொடுந்தீயில்?
கொஞ்சம் இறங்கிவா இடர்கள் கலைந்து !
உயிர் கொடுப்போம் நம் நட்புக்கு !
அதற்கு உண்டு உலகில் சாகாவரம் !
இருப்போம் இறப்போம் எந்நிலையிலும்,
வாழ்ந்திடும் அது நம் உறவை பறைசாற்றி !!
கவிதைகள் உலகம் ..smdsafa..