கட்டுண்டு கிடக்கிறேன் உன் பாதங்களில்
குனிந்து கூட பார்க்கவில்லை-நீ
சலிக்காமல் தொடர்கிறேன் உன் நிழலை
தலை கூட அசைக்கவில்லை-நீ
வரண்டுவிட்டது என் நா
இன்னமும் கூட பேசவில்லை-நீ
துவண்டுவிட்டது என் ஜீவன்
நீர்வார்க்கக் கூட தயாராயில்லை-நீ
இருந்தால் என்ன?
நடுங்கி வீழ்ந்தாலும் நெருங்குவேன் உன்னை
மரணம் கொண்டாலும் மரித்து எழுவேன் பெண்ணே
உனக்காக!
உன் பால் கொண்ட காதலுக்காக..!
கவிதைகள் உலகம் ..smdsafa..