அன்று தான் பார்த்தேன் அப்படி ஒரு அழகியை
தொடர்ந்தேன் நீ திரும்புவாய் என எண்ணாமல்
மறுகனம் மறுக்கிறேன் எதிர்பாத்தேன்
திரும்பினாய் புன்னகை பூவோடு
பூவிற்கு பெயர் வைக்க சொல்லி
அந்நேரமே செய்தி அனுப்பினாய்
ஆழ்மனதிருக்கு சம்மதம் என
ஆத்திரம் இல்லா உன் கடும் பார்வையால்
கொஞ்சம் வெட்கம் தான் பட்டுவிட்டேன்
கிருமி ஏதும் தாக்காமல் காய்ச்சலும்
கண்டுவிட்டேன்
பொழுது ஒன்று போக
என் முன்னே எதிரே வர எனக்கானவளாய்
நெருங்கும் நொடி பொழுதில்
உன் கை என் கையை கிள்ளிய வலி
இன்று வரை சுகமான வலி
உன் ஆர்வத்தை அறியா மடையன் நான்
பேச்சு என்ற ஒன்றை மறந்த மக்கும் நான்
ஆணாய் நான் தொடர பேச
உன் பெயர் என்ன என்ற ஒரு வரியின்
முதல் வார்த்தை உன் என்ற ஒரு சொல்
நான்கு முறை ஒளித்ததே உன் முன்னே
விடுமுறைக்கு நீ வர பக்கத்துக்கு
வீட்டிருக்கு என் பாதங்கள் பாதை போட
விடுமுறை முடிய எனக்கு விடுப்பு சொல்ல
கைபேசி ஆறுதல் கூற
சோகத்தோடு வழி அனுப்ப
சரி என்ற சொல்லுடன் விடை பெற்றாய்
நான் சொன்ன அத்தனைக்கும்
எதிர்பார்ப்புடன் ஏங்கி
ஏக்கம் கொஞ்சம் கலந்து
ஏதும் ஒளி அடிக்கா என் கைபேசி
நீ போய் இரண்டு தினம் ஆகி
உன்னை திட்டவே மறு தருனம்
கைபேசி ஒளிக்கவே
நான் தான் என்ற ஒரு சொல்
நொடி நின்ற என் மூச்சு மீண்டும் வந்தது
தொடரும் கைபேசி ஓசைகள்
அழுத்தும் பச்சை பட்டன்
இன்று வரை தொடர்ந்து .....
கவிதைகள் உலகம் ..smdsafa..