பிறப்பால் வந்த உறவுகள்
உதறிவிட்டு செல்லும்
எம் உணர்வுகளை
நட்பு மட்டும் தான்
உணர்வுகளால் வந்த
உறவு என்பதால்
உருகிக் கொண்டே இருக்கும்
உயிர் உள்ளவரை
பார்த்து பேசி
பழகுபவர்களே பாதி வழியில்
பரிதவிக்க விட்டு
செல்லும் போது
பாராமுகமாய் இருந்து
பாசமாய் பழகும்
பல நட்புக்கள்
பவித்திரமாய் என்றும்
நம் நெஞ்சோடு இருக்கும்
பகுத்தறிவோடு தான்
பழகுறோமே தவிர
பாகு பாட்டோடு அல்ல
அன்பை மட்டும் மூலதனமாக இட்டு
நண்பர்களை பெறுகின்றோம்
கவிதைகள் உலகம் ..smdsafa..