குட்டி தேவதையாய்
கண்களைச் சிமிட்டிக்கொண்டும்...
எச்சில் பிதற்றிய ஈர உதடுகளோடும்...
லேசாய் நிழலாய் தெரியும் அசைவுகளை
வெறித்துப்பார்த்துக்கொண்டும்...
புரியாத கொஞ்சல்களுக்கு புன்னகையோடும்...
காற்றில் சலசலக்கும் மயிலிறகாய்
தலை முடியோடும்...
பச்சைக் குருதி நரம்புகள் தெரியும்
சிவந்த பட்டு மேனியாய்...
பிஞ்சுப்பாதங்களில் முத்தமிட்டு கொஞ்சத்தூண்டும்
கொள்ளை அழகோடு
அந்நாளில் இன்று பிறந்தாய்...!
உன் மழலையில் இலயிக்கிறேன்...
இதோ ...
நினைவூட்டிப்போகும்... அன்று..
நீ பிறந்த.. நாள்.. இன்று..
இப்பொழுதும் நீ குட்டி தேவதைதான் ...
உதிரும் புன்னகையோடு பெற்றுக்கொள்...
உன் பிறந்தநாள் பரிசாக
என் குட்டி தேவதைக்கு
எனதன்போடு
பிறந்தநாள் வாழ்த்துக்கள்...!!!
கவிதைகள் உலகம் ..smdsafa..