விவாகமென்பது இருமனங்களின் சேர்க்கை!!
வாழ்கை என்னும் மரத்திற்கு
விதையாய் இன்று ஓர்தொடக்கம்
கோடையும் குளிரும் கலந்து
வருவது இயற்கை!
ஊடலும் கூடலும் பிணைந்து
வருவது வாழ்க்கை!!
மழைப்போல் வரட்டும் சுகம்
இருந்திடுவீர் அனுதினமுமே...
வெயில்போல் வரட்டும் சோகம்
பனிஆவியாய் மறையட்டும்
இருந்தால் அக்கணமே...
மரங்களை வெட்டி நமக்காக
வீடுகளை கட்டிக்கொண்டோம்!
மரங்களுக்காக காடுகளை கூட
நாம் விட்டுவைப்பதில்லை!!
ஆனால் நீவிர்
ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்து
ஒருவரையொருவர் புரிந்துக்கொண்டு
ஒன்றாய் பல்லாண்டுகாலங்கள்
முத்தமிழாய் சிறந்துவாழ்ந்திட
இறைவனை வேண்டுகின்றேன்...
============
இல்வாழ்க்கை இவ்வாண்டு
இனிய மழலைச் செல்வம் அடுத்தாண்டு ,
இணையில்லா பேரின்பம் கண்டு
இருவரும் வாழ்க பல்லாண்டு ,
கவிதைகள் உலகம் ..smd safa..