தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

நட்பும் காதலும்


நட்பும் காதலும் என் இரு கண்கள்;
காதல் என்ற முள் என் காதல்
கண்ணில் குத்தியது
நட்ப்பு கண் எனக்கு கண்ணீரை
தந்து ஆறுதல் கொடுத்தது
காதல் ஓர் ஜடம்
நட்பு ஓர் உயீர்


கவிதைகள் உலகம் ..smd safa..

இதுவா ஆணாதிக்கம்?


சிலநேரம் நீ மற்றவர் முன்பு,
மரியாதை குறைவாய் பேசினால்,
கொடுங்கோபம் நெஞ்சை ஆட்கொள்கிறது
அதேநேரம்,
உன் அருகே தனியே இருக்கும் சமயம்,
நீ மரியாதையாய் பேசினால்,
அங்கே ஆத்திரம் அலைமோதுகிறது,
அன்பே,
இதுவா ஆணாதிக்கம்?


கவிதைகள் உலகம் ..smd safa..

வெற்றிநிச்சயம்


தேனீக்கள் ஓய்வின்றி உழைத்தால்
தித்திக்கும் தேன் நிச்சயம்
உழவர்கள் ஓய்வின்றி உழைத்தால்
உயிர்வாழ உணவு நிச்சயம்
தோல்விகளையும் துன்பங்களையும்
கஷ்டங்களையும் நஷ்டங்களையும்
தாங்கிக்கொண்டு தன்னம்பிக்கையோடு
உழைத்தால் வெற்றிநிச்சயம்


கவிதைகள் உலகம் ..smd safa..

காதல் - காமம்

எல்லா காதலிலும் காமம் இருக்கும்.ஆனால்
எல்லா காமத்திலும் காதல் இருப்பதில்லை.


கவிதைகள் உலகம் ..smd safa..

என்றும் உன் நினைவில் வாழும்


காதல் வாழ்க்கையின் வெற்றிக்கு அஸ்திவாரம்
உங்கள் காதலின் வெற்றி
நீங்கள் படைக்கும்
அடுத்த தலை முறையினர்.

உங்கள் காதலியின் அழகையும் காதலியுங்கள்
அழகு இல்லாதவற்றையும் காதலியுங்கள்..

உடலை காதலியுங்கள் ...
மனதையும் சேர்த்து காதலியுங்கள்..

எதையும் எதிர் பாராது காதலியுங்கள்
நீங்கள் எதிர் பாரா காதல் உங்களிடம்...

ஆத்மாவை காதலியுங்கள்..
காதலில் முக்தி அடைய....


கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;