=========================
நம் காதல் உயர்ந்ததற்கு
உன் பார்வைதான்,
ஏணி-படி..!!
இப்போது உன் பார்வை
வேறுபக்கம் சாய்கிறதே
ஏனிப்படி..?
=========================
=========================
உன் பார்வை மழையை
யாசிக்கும் நான் ஒரு
தாவரம்…!!!
உன் பார்வையில்
தினமும் நனைய
எனக்குத்
தா-வரம்…!!!
=========================
கவிதைகள் உலகம் ..smdsafa..