என் அம்மா! உன்னை புகழ்ந்து பாட எனக்கு கவிதை எழுத தெரியவில்லை,
நீ செய்வதை சொன்னாலே அது கவிதை ஆகுமோ!
பத்து மாசம் பொத்தி வைத்து பெற்றெடுத்தாய் தாயே!
பிறந்தவுடனே அழுதது குழந்தை ஆனால் பெற்றெடுக்க சிரமப்பட்டது நீதான் அன்னை!
உன் வலியை பொறுத்து கொண்டு, குழந்தையின் அழுகை நிறுத்த
உன் இரத்தமே தாய்பாலா தந்தாயே தாயே!
நடக்க பழக்கிவிட்டாய், பேச கற்றுக்கொடுத்தாய்
அன்பாய் வளர்த்துவிட்டாய், நீ தானே என் தாய்!
முடியாது முடியாது என்று நான் சொன்ன போதும்,
உன் பாசம் முடிவதில்லை உன்னைபோல் பாசம் காட்ட எவரும் இல்லை!
இத்தனையும் செய்யும் தாயே எனக்கு ஆசையே நீ என்றும் என்னோடு இருப்பது தானே!
என் அம்மா! என் ஆசை நிறைவேறாது போனதே அம்மா..
கவிதைகள் உலகம் ..smdsafa..