விழிகளால் ஒளிபாய்ச்சினாய் !
பின் இமைகள்மூடி இருளாக்கினாய் என் புவனத்தை !
மீண்டும் விழுந்தது உன் கடைக்கண்பார்வை !
மகிழ்வு மேனி உரசியபோது மீண்டும் தனிமை !
இன்னும் எத்தனையோ அவல உணர்சிகள் !
அரிதாரம் பூசாத அதிர்ந்த முகத்தின் முகட்டில் !
இதன் பின்னணி ஒன்றிரண்டு மூன்று அல்ல !
எத்தனை அடிவிழுந்தாலும் தவிர்க்கமுடிவதில்லை !
பார்வையில் பாடைகட்டும் கண்ணீர் வீழ்ச்சியை !!
கவிதைகள் உலகம் ..smdsafa..