திடீரென இதயம் நின்று விட்டது
யார் காரணமோ..??
இதயம் நின்ற காரணம் அறிந்தால்
காதல் என்ன செய்யுமோ..??
இந்த காதல் என்ன செய்தால் என்ன
நான் கண்டுகொள்ள மாட்டேன்,
எதற்கும் அஞ்சிவிட மாட்டேன்,
துணிந்தே நிற்பேன்,
துயரத்தை இழப்பேன்..!!!
காதல் ரேகை அழித்துவிட்டேன்,
இதய ஓசை தொலைத்துவிட்டேன்,
இருந்தும் என்ன செய்வேன் பெண்ணே
உன் மூச்சுக்காற்றில் என்னை
கொன்று விட்டாய்..!!
இந்த காதல் கழுத்து வரை
என்னை இறுக்கி உயிர் எடுக்கிறதே..!!
அடைத்து வைத்த கடிகாரம் உள்ளே
நேரம் இழந்து தவிப்பதை போல,
உன் விழி ஓரம் பார்த்தே
விண்வெளியில் தவித்தேன் நானே..!!
யார் யோசனையும் கேட்கவில்லை,
சுய பரிசோதனையும் செய்யவில்லை..!!
காதல் என்றால் காதலல்ல
கண்ணீர் தந்து உயிரை உறிஞ்சும்
புதுமுறை வஞ்சனை..!!
வாஞ்சையுடன் அருகே சென்றால்
நஞ்சு தெளிக்கும் விந்தை..!!
காதலின் நிலையை கண்டேன்,
என் நிலை சுயமாய் தெளிந்தேன்,
எவளுக்கோ என்னுயிர் கரைந்து
காதல் சுனாமியில் மூழ்கும் முன்
தப்பி பிழைத்து தடம் கண்டேன்..!!
கவிதைகள் உலகம் ..smdsafa..
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..
பிரபலமான 5 கவிதைகள்
-
எத்தனையோ கவிதை எழுதினேன் என் கைகள் அலுத்துப் போனது ஆனால் கவிதை அசரவில்லை உன் அழகை வர்ணிக்க !!! வார்த்தைகள் ஒன்றன் பின் ஒன்றாக வழ...
-
எப்போது ஒன்று சேர்வோம்? எப்படி ஒன்று சேர்வோம்? இந்த ஏக்கங்கள் தவிப்புக்கள் இனிமேல் உமக்கு இல்லை! உணர்வுகளால் நேற்றுவரை உரையாடிய காதல்...
-
அ ன்பே என்று அழைத்திடுங்கள்! ஆ சைகளை எல்லாம் பட்டியலிடுங்கள்! இ தயங்களை ஈந்திடுங்கள்! ஈ ரவிழிகளை துடைத்திடுங்கள்! உ றவுகளை நினைத்தத...
-
மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து , ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக மாற்றி என் மனதோடு மகிழ்ந்தேன்... ஊத நினைத்தேன்...






- Follow Us on Twitter!
- "Like Us on Facebook!
- RSS
Contact @ SMDSAFA