தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

உன் புன்னகை



மலர நினைத்தும் மலர முடியாமல் உதிரும் மொட்டுக்களாய்,
என்னைப் பார்த்ததும்
மலர முடியாமலே மறைகின்றது உன் புன்னகை...... !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

தோழனோ தோழியோ




நான் செய்தது தவறென்றால்,
நீ செய்ததும் தவறுதான் !
மன்னித்து உறவாடுகிறேன் உன்னிடம் !
உணராமல் இருக்கிறாயே?
உச்சாணிக்கொம்பிலேயே !
இனி என்ன செய்யட்டும் நான்?
தன்மானம் தடவுகிறதே உன் நிராகரிப்பு !
தள்ளிவிட எத்தனிக்கிறாயா?
பிரிவெனும் கொடுந்தீயில்?
கொஞ்சம் இறங்கிவா இடர்கள் கலைந்து !
உயிர் கொடுப்போம் நம் நட்புக்கு !
அதற்கு உண்டு உலகில் சாகாவரம் !
இருப்போம் இறப்போம் எந்நிலையிலும்,
வாழ்ந்திடும் அது நம் உறவை பறைசாற்றி !!



கவிதைகள் உலகம் ..smdsafa..

ஷபா-மீதுள்ள காதல் கிறுக்கல்


======================
தாய் மடி கிடைக்காத
போது
உன் மடியில்
தலை சாய்ந்தேன்..
உன் மடியும்
கிடைக்காது
எனில்
மரணத்தின் மடியில்
தலை சாய்கிறேன்..
======================
===========================
உன் இதயத்தில் இடம்
இல்லையென்று தெரிந்
என் இதயம் உனக்காக
மட்டும் துடிக்கிறது
உன்
ஒரு வார்த்தைக்காக.. ஷபா..
===========================
========================================
என்னை மறந்திவிடு என்று
நீ கூறிய ஒரு வார்த்தையால்
நீ முத்தமிட்ட என் கண்கள்
நீங்காமல் கண்ணீர் சிந்துகின்றன
உன் நினைவை கழுவி விடலாமென்று ......
அவற்றுக்கு தெரியவில்லை
உன் நினைவை அழிக்க
கடல் நீரும் போதாதென்று
========================================

=================================================================
நினைவில் இல்லை என் ஜனனமே... !
உன்னைக் காணும் ஒவ்வொரு நொடியும் இறந்து பின் பிறக்கிறேன்,
அக்கணங்கள் ஒவ்வொன்றும் புதிய உலகில் இருப்பதாய் உணர்வதால்....!

காதலில் காத்திருப்பதும் சுகம் தான், ஆனாலும்
4 வருடமாக காத்திருப்பது தான் ஏனோ??

இது என்ன விதியா?? அல்ல இறைவனின் சதியா?? - smdsafa

=================================================================
கவிதைகள் உலகம் ..smdsafa..


அடம்பிடிக்கிறதே என் இதயம்


உன் மனதில்
நான் இல்லையென
தெரிந்தும் சிறுபிள்ளைபோல்
கொஞ்சம் கூட வெட்கம் இல்லாமல்
நீ வேண்டுமென்றே அடம்பிடிக்கிறதே
உன் பெயர் சொல்லியே துடிக்கிறதே
என் இதயம்.....


கவிதைகள் உலகம் ..smdsafa..

மௌனம் வேண்டாம் காதலியே



என்
மீது
கோப படு..
என்னோடு
சண்டையிடு..
பேசாமல்
மட்டும்
இருந்து விடாதே.!
நான்
செத்து போய்
விட
வாய்ப்புண்டு.. .


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;