தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

என் உணர்வுகளையும் நினைவுகளையும்



அவள் வெஜ் என்று நினைத்திருந்தேன் ...

இல்லை ,

அவள் நான்வெஜ் தான் ...
என்னை மட்டுமல்ல ...

என் உணர்வுகளையும் நினைவுகளையும்
கூட
அவள் உண்பதால் ...


கவிதைகள் உலகம் ..smdsafa..

நட்பை தொடரும் ஆண்கள்



பிடித்தமாதிரி இருக்கும் தோழியிடம்...
தன் காதலை சொன்னால்...

எங்கே பேசாமல் இருந்து விடுவாளோ...?
என்ற
புழுக்கத்திலேயே நட்பை தொடரும்
ஆண்கள்தான் எத்தனை பேர்களோ..?


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீர்வீழ்ச்சி



விழிகளால் ஒளிபாய்ச்சினாய் !
பின் இமைகள்மூடி இருளாக்கினாய் என் புவனத்தை !
மீண்டும் விழுந்தது உன் கடைக்கண்பார்வை !
மகிழ்வு மேனி உரசியபோது மீண்டும் தனிமை !
இன்னும் எத்தனையோ அவல உணர்சிகள் !
அரிதாரம் பூசாத அதிர்ந்த முகத்தின் முகட்டில் !
இதன் பின்னணி ஒன்றிரண்டு மூன்று அல்ல !
எத்தனை அடிவிழுந்தாலும் தவிர்க்கமுடிவதில்லை !
பார்வையில் பாடைகட்டும் கண்ணீர் வீழ்ச்சியை !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நிலவும் நட்சத்திரமும்

இரக்கமில்லாத
காதலிக்காக வேண்டி
காத்திருக்கும் ஆண்கள் எண்ணி
பார்த்து பொழுது போக்கத்தான்
நிலவும் நட்சத்திரமும் கடவுளால்
படைக்கப்பட்டன..?!

கவிதைகள் உலகம் ..smdsafa..

குறுந்தகவல் (மெசேஜ்)




தினம் நீ அனுப்பும்

குறுந்தகவல்களால்

நிரம்பி வழிவது

என் தொலைபேசி மட்டுமல்ல

என் இதயமும் தான்...!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;