தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

பிடிக்காத கணவனுடன்


ஆற்று நீரைச் சொட்டியவாறே சென்றது
லாரியில் இருந்த ஈர மணல்,
பிறந்த வீட்டிலிருந்து, பிடிக்காத கணவனுடன்
அழுதுகொண்டே செல்லும் பெண்ணைப் போல...!!


கவிதைகள் உலகம்..

பெண்கள்


* 5 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது தாய்

* 15 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது சகோதரி

* 30 நிமிடத்தில் ஒரு பெண் சமாதானம் ஆகிறாள் எனில்,
அது தோழி

* 3 மணி நேரத்திற்கு மேலாகியும் சமாதானபடுத்த முடிய வில்லையெனில், அது காதலி

* உனக்கு சமாதானம் செய்யும் சந்தர்ப்பம் கூட கிடைக்க வில்லையெனில் அது மனைவி


கவிதைகள் உலகம்..

கணவன் - மனைவி யார் அதிகம் மகிழ்ச்சியா இருக்றது??

மனைவி: டேய், எனக்கு ஒரு சந்தேகம்!!!


கணவன்: என்ன?

மனைவி: யார் இந்த உலகத்துலேயே அதிக மகிழ்ச்சியாக இருக்கா? நீயா?? நானா???

கணவன்: இதுல என்ன சந்தேகம்… நான் தான்!!!

மனைவி: எப்படி சொல்ற? நீ காலைல வேலைக்கு போனா, இரவு தான் வர.. உனக்கு தான் உலகத்தை ரசிக்க நேரமே இல்லையே….

கணவன்: ம்ம்.. சரி, உனக்கு ஒரு நாள் முழுவதும் நேரம் தரேன் உனக்கு என்ன

என் மகளுக்கு ஒரு கவிதை!!


அப்பா என்னும் ஸ்தானத்தை அடைந்தேன்
உன் பிறப்பால் !!
பொறுப்புகள் பல உன்னுடன் சேர்ந்து சுமந்தேன் என் மார்பில் .!!

உன் வயது தான் வளர அதனுடன் சேர்ந்து குறையதுடிக்கிறது என் வயது !!!

தாலாட்டு பாட தாய் இருந்தும் உன் செவிகள் என் குரலினை கேட்க ஏங்கினேன்!!!

நீ தூங்கும் தலையணையாய் என் மார்பு மட்டுமே இருக்க துடிக்கிறேன் !!!

நீ பிறந்த நாள் முதல் நீ என் மகள் என்று உரைக்க பொறாமையும் வளர்கிறது என்னுள்ளே

விண்மீன்கள் மின்னும் தொட்டிலில் நீ தவழ விரும்பினேன்!!!!

ஒரு பெண் எப்போதெல்லாம் அழகாகிறாள்?


1.தரைக் கூட்ட இருக்கும்
பாவாடையை தூக்கி பிடித்த படி பாத
கொலுசில் ஜதி பாடி நடந்து வரும்
போது.
2.பேருந்தில்
தெரிந்தே இடிப்பவனுக்கு யாருக்குமே தெரியாமல்
தண்டனை தரும் போது.
3.நான் இப்படியெல்லாம் வளர்ந்தேன்
என்று பெருமை பேசாமல்
உன்னை அழகாய் வளர்த்திருக்கிறார்கள்
என்று அனைவரையும் சொல்ல வைக்கும்
போது.

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;