தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

மாய ஆறு



முடிவுக்குவந்துவிட்ட சமயம்,
மீண்டும் கவிழ்ந்துவிட்டது நினைவு,
தலைகுப்புற தண்ணீருக்குள் !
இது காதலின் வழக்கம் !
பிரிந்துவிட முடிவெடுக்கும்,
மானம்கெட்ட மனோதைரியம்,
மயான வைராக்கியம்போல !
ஆறு தொடரும் பயணத்தை,
ஆனால் விழுந்தபடியே இருக்கும் அதில்,
விநோத முரண்டுபிடிக்கற்கள் !
உனக்கான முனகல் சத்தங்களுடன் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நிமிடங்கள்



நீ காக்கவைத்த நிமிடங்களை கணக்கிட்டால்,
வாழ்கையின் ஒரு பகுதி,
படபடப்பும் பதட்டமுமாய் முடிந்துபோயிருக்கும் !
இருந்தாலும் அவைகள்,
வீணான நிமிடங்களல்ல !
உனக்காக எனை செதுக்கி நான் நானான நிமிடங்கள் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் ஏன் புனிதமானது ?



காதல் ஏன் புனிதமானது
என்று கேட்டாள்
கன்னி ஒருத்தி

பக்தியும் காதலும்
கிட்டத்தட்ட ஒன்றே என்றேன்..

எப்படி ? எப்படி ? என்றே
நெருங்கி வந்தாள்

வியர்த்தல் மயிர் சிலிர்த்தல்

உடல் குலுங்குதல்

கண்ணீர் அரும்புதல்

வாய்விட்டு அழுதல்

சொல்ல இயலாமை

மிடறு விம்முதல்

நா தழுதழுத்தல்

இதழ் துடித்தல்

மெய் மறத்தல்
.............
இவை எல்லாம்

காதலிலும் உண்டு

பக்தியிலும் உண்டு

ஆகவே காதலும்

புனிதமானது ..அழகே

என்றேன்

பிரசாதமாக

கிடைத்தது

முத்தம் ஒன்று

--------------------------


கவிதைகள் உலகம் ..smdsafa..

அவள் விரல் கோர்த்ததும்



அலையோடு அடித்துச்செல்லப்பட்டதும்,
அடியோடு இழுத்துக்கொள்ளப்பட்டதும்,
தொடர்ச்சியாய் நிகழ்ந்தது !
நீ எனை பார்த்தபோதும் !
பின் என் விரல்கள் கோர்த்தபோதும் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

காதல் தேர்வு



கல்லூரியில் கூட
யாரையும் பார்த்து
தேர்வெழுதியதில்லை..

காதலில் மட்டும்
உன்னைப்பார்த்து தான்
கவிதை எழுத தொடங்கிவிட்டேன்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;