தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

உன்னிடத்தில்

உன்னை சந்தித்த போது

என்னை மறந்தேன்...

என்னை மறந்த போது

உன்னை நேசித்தேன்..

உன்னை நேசித்த போது

என்னையே தொலைத்தேன்

                                           -உன்னிடத்தில்....


கவிதைகள் உலகம் smdsafa.net

தாஜ்மஹால்

என்னை கட்டியவனும் இல்லை
என்னை கட்டச்சொன்னவனும் இல்லை
இருந்தாலும் வாழ்கிறேன்..
உண்மையான காதலர்களை
காண்பேன் என்ற நம்பிக்கையில்..
-தாஜ்மஹால்



கவிதைகள் உலகம் smdsafa.net

Facebook link





கவிதைகள் உலகம் smdsafa.net

அவளுடன் ஒரு மழைநாளில்

உன் கைவிரல்களை விட
அந்த துப்பட்டாவை பிடித்து நடக்கவே
ஏங்குகிறேன்
தாயின் அருகாமை உன்னில்
உணர்வதால்
.....யாரேனும் காதலியோடு
மழையை ரசித்ததுண்டா
?சிறுதூரலில் சிலிர்த்து
உன் கரம் பிடித்து நடக்கையில்
சிதறுகிறதே என் மனம்
!வானம் நடத்தும்
வண்ணக்கோலங்களை
காட்டும் ஆச்சர்யங்களை
ரசித்துக் கரைகிறேன்
- நீ....மண்வாசமும் உன்வசமும்
ஒருசேர ருசித்ததால்
சுவாசிக்க மறக்கிறேன்
....யாரேனும் பார்துவிடக்கூடும் என்ற
உன் உதடுகளின் முனுமுனுப்பை
மூளைக்குச் செல்லும்முனே
முட்டுக்கட்டை போடுகிறதே
என் மனது
....உன் கைவிரலின் இளஞ்சூட்டில்
குளிர் மறக்க
-நான்,என்னை பார்வைகளால்
பதரடித்துக்கொண்டே நடக்கிறாய்
!இது என்ன புற்களில் இன்று
வெள்ளைப்பூக்கள்
மின்னுகின்றன
- ஏன் இப்படி!உன் முகத்தின் பிரதிபலிப்போ?இந்த நாள்
இந்த நொடி
இங்கேயே காலம் நிற்கட்டும்
....என்னை உன்னில் கரைத்த
மழை
என்றும்
நம்மை நம்மில் விதைக்கட்டும்
..

பரிசு அலமாரிகள்

பலர் பாராட்ட
மேடையில் வழங்கப்பட்ட
பரிசுகள்
,வெற்றியின் அடையாளமாய்
உயர்வாய் பேசி கொடுக்கப்பட்ட
,இக்கலையில்
இக்காரனத்தால்  இவன் சான்றோன்
,பலத்த கைதட்டல்கள்,பாராட்டு உரைகள்,எதி காலத்தை
மிக வெளிச்சமாய்
சொல்லி வந்திட்ட
- பரிசுகள்,கவனிப்பின்றி
தூசு படிந்து
,அழுக்கடைந்து,கலையிழந்து கிடக்கிறது
என் கிராமத்து வீட்டில்
,திறமைக்கு
கொடுக்கப்பட்டவை
தீண்டுவார் இல்லாமல் கிடக்கிறது
,வாங்கிய போது
வானில் பறக்க வைத்தவை
வலுவிழந்து கிடக்கிறது
,அருமை பெருமையாய்
வந்தவை
வற்றிய குளமாய் காய்கிறது
- இன்று,கழுத்துக்கு
மாலை கொடுத்தவை
கழுத்தறுந்து கிடக்கிறது
- இன்று,புகழ் மலைகள்
காய்ந்து போனது
,பொன்னாடைகள்
கரிதுணியாய் ஆனது
,புகழ் பெறுதல்
தொடராமல் போனதால்
என் பரிசு அலமாரிகள்
முக்காடு இட்டு முடிவு பெற்றது
.

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;