உன் கைவிரல்களை விட
அந்த துப்பட்டாவை பிடித்து நடக்கவே
ஏங்குகிறேன்
தாயின் அருகாமை உன்னில்
உணர்வதால்.....யாரேனும் காதலியோடு
மழையை ரசித்ததுண்டா?சிறுதூரலில் சிலிர்த்து
உன் கரம் பிடித்து நடக்கையில்
சிதறுகிறதே என் மனம்!வானம் நடத்தும்
வண்ணக்கோலங்களை
காட்டும் ஆச்சர்யங்களை
ரசித்துக் கரைகிறேன்- நீ....மண்வாசமும் உன்வசமும்
ஒருசேர ருசித்ததால்
சுவாசிக்க மறக்கிறேன்....யாரேனும் பார்துவிடக்கூடும் என்ற
உன் உதடுகளின் முனுமுனுப்பை
மூளைக்குச் செல்லும்முனே
முட்டுக்கட்டை போடுகிறதே
என் மனது....உன் கைவிரலின் இளஞ்சூட்டில்
குளிர் மறக்க-நான்,என்னை பார்வைகளால்
பதரடித்துக்கொண்டே நடக்கிறாய்!இது என்ன புற்களில் இன்று
வெள்ளைப்பூக்கள்
மின்னுகின்றன- ஏன் இப்படி!உன் முகத்தின் பிரதிபலிப்போ?இந்த நாள்
இந்த நொடி
இங்கேயே காலம் நிற்கட்டும்....என்னை உன்னில் கரைத்த
மழை
என்றும்
நம்மை நம்மில் விதைக்கட்டும்..
கவிதைகள் உலகம் smdsafa.net