தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

வராதே



எவ்வளவு தூரம் முடியுமோ?
அவ்வளவு தூரம் வெறுக்கிறேன் !
இனி வராதே !
என் வழியிலும் வாழ்க்கையிலும் !
என்று சொல்லத்தான் ஆசை !
எனை பிரிந்து நீ தனியாய் திரியும்,
எல்லா மணித்துளியிலும் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

தேவதை வாசம்



நான்,
தேவதையோடு பலகித்தொலைத்து,
தெருவெல்லாம் தேடியலைந்தவன் !
சத்தியமாய்த் தெரியாது !
அவர்களுக்கு !
இங்கே வந்துபோகமட்டுமே உரிமை !
வாழ்வதற்கு அல்ல என்று !
காதலில் கதகளி ஆடியது எனது தவறே !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

மனப்பரப்பு



காயப்படுத்தினாய் !
என் கடற்பரப்பை !
உன் கொடூர கொந்தளிப்பால் !
மண்டியிட்டு சரிந்தேன் மனது கனத்து !
தலைதடவி ஆறுதல் சொன்னது !
சில சின்னச்சின்ன அலைகள் !
அதுவெல்லாம் மூழ்கடித்தது எனை !
நீ என்னை முகர்ந்து தந்த முத்தங்களின் சாயலில் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

உன் விழியால்



உன் வலிகளை,
நீ தனிமையில் விவரித்தபோது,
என் விழிகள் பழுதுபட்டது !
அங்கே !
மொழிகள் பெரிதாய் உதவவில்லை !
என் ஆறுதலையும் அரவணைப்பையும்,
அன்பாய் வெளிப்படுத்த !
மாறாய் மதகுடைத்த வெள்ளமாய்,
நான் மனதுக்குள் அழத்தொடங்கியிருந்தேன் !


கவிதைகள் உலகம் ..smdsafa..

என் கல்லறையில்



மனத்தால் உனைத்தாங்கி
கவிதையாய் தாலாட்டி
நீ உறங்க கண்விழிப்பேன்
தினம்தோறும் உன்னை காதலிப்பேன்
என் கல்லறையில் எழுதி வைப்பேன்
காதல் சுகமானது என்று.!! -காதலுடன்


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;