தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

பெண்ணை புரிந்துகொள்ள முயற்ச்சி செய்யாதே

எந்த ஒரு பெண்ணையும் முழுவதுமாக

புரிந்துகொள்ள முயற்ச்சி செய்யாதே..!!..

முடிவில் அந்த பெண்ணை

காதலிக்க ஆரன்பித்து விடுவாய்.,

அல்லது நீ பைத்தியமாகி விடுவாய்..

(எனக்கு தெரிந்து இரண்டுமே ஓன்று தான்..)

கவிதைகள் உலகம் ..smd safa..

பாசத்தின் தவிப்பு

என் தனிமையின் ஒவ்வொரு நிமிடங்களும்,

உன்னுடன் பழகிய நட்பின் கனம நிறைந்த

ஓராயிரம் நினைவுகளை அள்ளிக் குவிக்கின்றன..

அத்தனையும் இங்கு முத்து, முத்தாக என்

 கன்னங்களை நிறைக்க உயிரும் கரைகிறது..

என்னவளே..,
         உன் பாசத்தின் பரிதவிப்பான  ஏக்கத்துடன்..!!

கவிதைகள் உலகம் ..smd safa..

என் கவிதைகள்

எதிலிருந்து எழுத துவங்கினாலும்,

மீண்டும், மீண்டும்

காதல் என்கிற புள்ளியிலேயே

வந்து முடிவடைகிறது,

   -  என் கவிதைகள் அனைத்தும்..

கவிதைகள் உலகம் ..smd safa..

என்னையும் கொன்று விடு

வலியின் உச்சத்தில் கருணைக்

- கொலை அனுமதிக்கப்படுகிறது..

பெண்ணே..,  என்னையும் கொன்று விடு.,

  - கருணை கொலை என்ற பெயரிலாவது..

கவிதைகள் உலகம் ..smd safa..

உண்மையான காதல்

வறட்டு கெளரவம்.,

வீண் பிடிவாதம்.,

சமுதாயத்தின் உளறல்கள்.,

சொந்தங்களின் போலி புன்னகை.,

பணம் என்னும் காகிதம்.,

இவை அனைத்தும் கொன்று விட்டது.,

    - "என் உண்மையான காதலை"..

காதலி பிரிந்தாலும், காதலர்கள் இறந்தாலும்

       ஒருபோதும் "காதல் அழிவதில்லை"..

கவிதைகள் உலகம் ..smd safa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;