தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

என்ன செய்வேன் என் மனதை


ஒடிக்க முடிந்தால்
ஒடித்திருப்பேன்
அழிக்க முடிந்தால்
அழித்திருப்பேன்
அறுக்க முடிந்தால்
அறுத்திருப்பேன்
வெட்ட முடிந்தால்
வெட்டி இருப்பேன்
ஆனால்
என்ன செய்வேன்
உன்னையே நினைத்து
ஏங்கும் என் மனதை
உன்னைப் போலவே
ஒளிந்து விளையாடுகிறது
என்னிடம்...


கவிதைகள் உலகம் ..smdsafa..

புதைவதும் ஆனந்தமே


அனைவரையும் வெறுத்த நீ
என்னை மட்டும் வைத்தாய் உன் இதயத்துக்குள்..

இன்று அத்தனை பேரின் முன்னிலும்
என்னை மட்டும் வெறுத்து புதைக்கிறாய்
                                                    அதே உன் இதயத்துக்குள்..

புதைவதும் ஆனந்தமே..
                   உன் இதயத்தினுள் தானே, பரவாயில்லை.. ‎#smdsafa


கவிதைகள் உலகம் ..smdsafa..

சந்திரகிரகணம்


சந்திரகிரகணத்திற்கு,

விஞ்ஞானம் ஏதோ

விளக்கம் சொல்கிறது..!!!

ஆனால்,

என்னைப் பொறுத்தவரை

உன்னை எது மறைத்தாலும்,

எனக்கு சந்திரகிரகணம் தான்…!!!


கவிதைகள் உலகம் ..smdsafa..

தனிமை - நானும் நிலாவும்



இரவு பேருந்து பயணம்
நிலவும் என்னை போல் தனிமையில்
என்னோடு சேர்ந்து அதுவும் பயணிக்கிறது
விட்டு சென்ற தன் துணையைத் தேடியோ
அதை சுற்றி சொந்தங்களாய் பல நட்சத்திரங்கள்
இருந்தாலும்.. -பாத்திமா..


கவிதைகள் உலகம் ..smdsafa..

நிறம் : காதலின் வகை



நினைவுக்கு ஆறு நிறம் !
அதன் ஒவ்வொன்றிலும்,
நீ அழகாய் பூத்திருந்தாய் !
உன் நிழலுக்கோ நூறு நிறம் !
அதன் அசைவுகள் எதையும்,
கணிக்கவே இயலுவதில்லை !
அது ஏனெனச்சொல்?
நிழலின் நிறம் கருப்பு என்பதா,..?


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;