தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

நீயும் நானும்



நீ எனை சாடி,
ஊருக்குள் விலகிச்சென்றவள் !
நான் உனை தேடி,
உயிருக்குள் உலவச்சென்றவன் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

குத்தல்கள்



கதவு ஜன்னல்கள் மூடியிருக்கும்போதும்,
உள்ளே நுழைந்துவிடும் கொசுக்களைப்போல,
எந்தத்தனிமையிலும் புகுந்து கடிக்கிறது !
ஓய்வெடுக்கவிடாத,
உன் ஞாபகக்கூர்மைக்குத்தல்கள் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

அடையாளம்



உயிருக்குச் சொல்லிக்கொடுத்தேன்,
அதன் உருவம் நீயென்று !
உணர்ந்துகொண்ட அது,
தேடத் துவங்கியது உன்னை !
உனக்குள் நிரந்தரமாய் அடைந்துவிடலாம்,
அடக்கமாகிறவரை என்று !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

சுற்றம்



நான் தேடும் முகவரி எல்லாம்
உன் இதயம் மட்டும்தான்
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே...பழிவாங்கப் புறப்பட்டவனின் விழிகளில்,
கொஞ்சம் ஒளிந்திருந்தது ஈரம் !
ஆனாலும் அது எப்போதும்,
அக்கினிக்குளம்பாய் கனன்றுகொண்டே !
நிலையுணர்ந்து அதை தணிக்க யோசிக்காமல்,
தீக்கங்குகளை அள்ளிப்போட்டுக்கொண்டே !
தவறாமல் உறவுக்கழுகுகள் !
அவனையே பலிகொடுக்க !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

நீ தரும் முகவரி



நான் தேடும் முகவரி எல்லாம்
உன் இதயம் மட்டும்தான்
ஆனால் நீ தரும் முகவரியோ
வலிகள் மட்டுமே...


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;