தமிழ் கவிதைகள் உலகம், காதல், நண்பர்கள், மழை, சோகம், வலி, மேலும்.. கவிதைகள் உலகம்.. உங்களுக்கு விருப்பமான மொழியிலும் கவிதைகளை படிக்கலாம்.. உங்கள் கருத்துக்களை பதிவு செய்யவும்.. நன்றி.!! Tamil poetry's world.. Love, Friendship, Rain, Sad, Pain, etc.. Choose your language to Read Poem's.. give Your comments., & share Likes..

என்னுள் ஒரு தேடல்



மூங்கில் காடுகளில் அலைந்து திரிந்து ,

ஒரு மூங்கிலை தேர்வு செய்து அழகிய புல்லாங்குழலாக

மாற்றி என் மனதோடு மகிழ்ந்தேன்...

ஊத நினைத்தேன்..

மறுத்தது...

பின்பு தான் தெரிந்தது..

அது ஊமை என்று...

அது போல் தான் உன்னுடனான என் வாழ்க்கையும்...

நீ என்னுள் இணைய மாட்டாய் என்று எனக்கு தெரியும்..

இருப்பினும் என்னுள் ஒரு தேடல்...

உன்னை காண...



கவிதைகள் உலகம் ..smdsafa..

முயற்சி


மறக்க மாட்டேன்
நான் மரணிக்கும் வரை
என் வறுமையின் நிலையை

மரணித்தாலும் முயற்சி
செய்யாமல் விட மாட்டேன்

எனை சார்ந்தவர்களின்
வறுமையை போக்க ..

கவிதைகள் உலகம் ..smdsafa..

படிப்பு தான் கவிதையோ !



வறுமையை படித்தேன்
கவிதை கொடுத்தது ..
உனை படிக்க முயன்றேன்
நீயோ உயிரை பணையமாக
வைத்து விட்டு கவியை
பரிசாக கொடுத்தாய் !!


கவிதைகள் உலகம் ..smdsafa..

ஐ மிஸ் யூ



உன் பாத சுவடு 

தேடியே என் 

வாழ்க்கை சுவடு 

அழிந்து கொண்டு 

இருக்கிறது ..



கவிதைகள் உலகம் ..smdsafa..

வாழ்வியல்



திசைமாறிய பாய்மரக்கப்பலில்,
அசைவற்றுக்கிடந்தது எங்கள் விதி !
அவளுக்கும் எனக்கும் இடமிருந்தது,
ஆனாலும் எங்களைச்சுற்றி,
காற்றும் புயலும் சுழன்றது !
தனித்தீவுக்கோ புது வாழ்வுக்கோ,
பிரியப்படவேயில்லை நாங்கள் !
எங்களின் தேவையெல்லாம்,
இடர்பாடுகளில்லாத பயணமாகவேயிருந்தது !
அதனால் பிரார்த்தனைகள்,
ஆபத்தில்லாத பயணம்வேண்டியே உழன்றது !
கட்டிப்பிடித்து கண்ணீர்விட்டு அழ,
காதலேதும் இருக்கவில்லை எங்களிடம் !
ஒட்டுமொத்தமான தேவையாய் சத்தமற்ற அமைதியும்,
அதன் இலக்காய்...........
ஒரு அர்த்தமான வாழ்க்கையாகவுமேயிருந்தது !
சூழ்நிலைக்கேற்ப என்ன மாறுவது இங்கே?
யோசிக்கவிடாதபடி யாசிக்கிறது உயிரை பசி !
உணர்ச்சியில் எத்தனை பரிமாணங்கள்,
திக்குத்தெரியாத இந்த ஆயுள் இருளில் !
இணைந்து எப்படி வாழ்ந்தாலும்,
தனித்து விதிக்கப்பட்டதுதானே பிறவி !
வாழ்ந்துவிடலாமே எவருக்கும் வலி தராமல் !
குறைந்தபட்ச அன்பாய் ஒரு புன்னகையை பரிசளித்து !!
மற்றபடி தொடர்ந்துகொண்டே இருக்கட்டுமே,
பேரலைகளுக்கிடையிலான போராட்டமும் திசைதேடலும்..............


கவிதைகள் உலகம் ..smdsafa..

உங்கள் கருத்துகளை தெரிவிக்கவும்..

Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபலமான 5 கவிதைகள்

 
;